பெரியார் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் உடன் ஒரு சந்திப்பு:
20/12/20
பெரியார் பல்கலை கழகத்தின் துணைவேந்தர்
உயர்திரு.பேராசிரியர் டாக்டர் P.குழந்தைவேல் அவர்களை இன்று அவர் சொந்த ஊரான
நாமக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டி கிராமத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாட கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
அவர் தனது பள்ளிக் கல்வியை அரசு பள்ளியில் பயின்றவர்.
பின்பு இளநிலை மற்றும் முதுநிலை அறிவியல் பட்டத்தை இயற்பியல் துறையில் சென்னை பல்கலைக் கழகத்தில் பெற்றார்.
தொடர்ந்து 1987-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சிக் கல்வியை மூலக்கூறு நிறமாலை (Molicular Spectroscopy) என்கின்ற இயற்பியல் துறையின் கீழ் முடித்தார்.
அவருக்கு கற்பிப்பதில் இருந்த ஆர்வத்தின் காரணமாக தமிழ்நாடு கல்லூரி கல்வி துறை இயக்ககத்தின் ( Tamilnadu Collegeate Educational Service ) கீழ் அரசு கலை அறிவியல் கல்லூரியில் துணை பேராசிரியராக 1984 -ல் இருந்து பணியாற்றினார்.
பின்பு தனது பேராசிரியர் பணியை கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் 2002 முதல் தொடர்ந்தார்.
அவர் தனது கணிசமான பங்களிப்பை In the field of “Molecular Quantum physics” “Molecular Structure” “Interactions and Molecular Dynamics of Biomolecules”-க்கு அளித்தார்.
மேலும் அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2007 முதல் 2016 வரை இயற்பியல் துறையின் தலைமை பேராசிரியராகவும், மருத்துவ இயற்பியலின் இயக்குனராகவும் (Medical physics and Director) பணியாற்றினார்.
மேலும் அவருக்கு 2010ஆம் ஆண்டில் (TANSA – Tamilnadu Science Award)- தமிழ்நாடு அறிவியல் விருது) வழங்கப்பட்டது.
2012 ஆண்டில் அமெரிக்காவின் FULBRIGHT – NEHRU EDUCATION ADMINISTRATIVE AWARD -ம் வழங்கப்பட்டது.
அவரது 175 ஆராய்ச்சி முடிவுகள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் தனது பங்களிப்பை TAYLOR AND FRANCIES PUBLICATIONS, FLORIDA, USA புத்தகங்களில் கொடுத்துள்ளார்.
அவரது ஆராய்ச்சி வழிகாட்டுதலின் கீழ் 60 M Phil மாணவர்களும், 18 Phd மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
இவரிடம் நான் கண்ட விஷயங்கள்:
உச்சகட்ட
பணிவு;
மரியாதை;
நேர்மை;
ஒழுக்கம்;
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு சமுதாயத்தில் நேர்மையான சூழ்நிலை உருவாக காரணமாக இருக்கவேண்டும் என்கின்ற இவரின் சமூக அக்கறை, எண்ணம் மிகவும் பாராட்டத்தக்கது.
ஆங்கிலேயர்களை பற்றி இன்னும் மிக மரியாதையாக நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில்
இவரைப் போன்று மிக சிறப்பாக நேர்மையாக பணியாற்றக்கூடிய அதிகாரிகளைப் பற்றி நம் பாடத்திட்டத்தில் பாடங்கள் இருக்க வேண்டும்.
நாடு நலமாக இருக்க இது ஒன்றே ஒரே வழி.
இவருக்கும் இவர் குடும்பத்தினருக்கும்
நீண்ட ஆயுளையும்
சந்தோஷமான வாழ்க்கையையும் ஆரோக்கியமான உடல் நிலையையும் இப்போது போல்
எப்பொழுதும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என ஆண்டாளை பிராத்திக்கின்றேன்.
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்.
Share this: