July 11 2022 0Comment

1 vs 2

 1 vs 2

கூகுள் நிறுவனத்தின்
தலைவர் சுந்தர் பிச்சை அவர்களுடைய
சமீபத்திய பேட்டியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்தேன்

அதில் அவர் ஒரு சுவையான அனுபவத்தைச் சொல்கிறார்

சுந்தர் கூகுளில் சேர்ந்த புதிது

அங்கு அவர் பலரைச்
சந்திக்கிறார் தன்னிடம் உள்ள
புதிய யோசனைகளை, கருத்துகளைச் சொல்கிறார்

பொதுவாக, இதுபோன்ற புதிய யோசனைகளைக் கேட்கிறவர்கள் இரண்டுவிதமாகப் பதில் சொல்வார்கள்:

வகை 1:

ம்ஹூம், இது சரிப்படாது என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு,

ஏன்னா என்று அதற்குக் காரணங்களை அடுக்குகிறவர்கள்

வகை 2:

அட, நல்ல யோசனையா இருக்கே என்று பாராட்டிவிட்டு,
இதோட நீங்க இந்த
விஷயத்தையும் சேர்த்தீங்கன்னா இது இன்னும் நல்லா வரும்
என்று வழிகாட்டுகிறார்கள்

இந்த இரண்டாவது வகை
மக்களை people who expand on your ideas என்று அழைக்கிறார் சுந்தர்

அதாவது, உங்கள் யோசனைகளை முறித்துப் போடாமல் அவற்றை விரிவுபடுத்திச் சிறப்பாக்க வெற்றிபெற உதவுகிறவர்கள்

சுந்தர் கூற்றுப்படி கூகுளில்
இந்த இரண்டாவது வகை மக்கள் மிகுதியாக இருக்கிறார்களாம்

அதனால்தான் சுந்தர்
வேறு நிறுவனங்களைப் பற்றிச் சிந்திக்காமல் கூகுளில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றத் தீர்மானித்தாராம்

இந்த அனுபவத்தைக் கேட்டபோது, என்னைச் சுற்றியிருக்கிறவர்களில் யாரெல்லாம் வகை 1, யாரெல்லாம் வகை 2 என்று யோசித்துப் பார்த்தேன்

இதில் நான் எந்த வகை என்றும் யோசித்துக்கொண்டேன்

யாருடைய யோசனையையும் (அது நம் பார்வையில் படுமுட்டாள்தனமாக இருந்தாலும்) ஒரே வரியில் முறித்துப்போடுவது அவர்களுக்கு எவ்வளவு சோர்வளிக்கும்
என்று புரிந்தது

அதற்காக, விமர்சனங்கள், எதிர்மறைக் கருத்துகள் கூடாது என்று பொருள் இல்லை

நம்மைச் சுற்றிப் பெரும்பாலும்
வகை 2 ஆட்கள் இருந்தால், ஒவ்வொரு யோசனையும் திறந்த மனத்துடன் அணுகப்படும்,
அலசப்படும், விரிவு பெறும்,
முதிர்வு பெறும்…

அவ்வாறு வேலை செய்வது
நமக்கும் மன நிறைவை அளிக்கும்

முட்களின் நடுவேதான்
வாழ்கிறது….
இருப்பினும் ரோஜா ஒரு நாளும் முகம் சுளிப்பதில்லை

எதிர்மறையான சிந்தனைகள் உள்ளவர்கள் நம் பக்கத்தில் இருந்தாலும் அவர்களுடைய சொற்கள் நமக்கு முட்களாக இருந்தாலும் i don’t care என்று
நீங்கள் ரோஜாவாக
இருந்து விட்டுப் போங்கள்

பாதையில் தடைகள்
வந்தால் தகர்த்துவிட்டு
தான் செல்ல வேண்டும்
என்று அவசியமில்லை…..
அதனைத் தவிர்த்து விட்டும் செல்லலாம்..!

எனவே ஒன்றை தவிர்த்து விட்டு நமக்கே நமக்கானவர்களுடன்
நம்மை அடுத்த கட்டம் நகர்த்துவதற்கான வேலையை துவங்குங்கள்

ஒரு கட்டத்திற்கு மேல்
நாம் வென்று விட்டோம்
என்பதை நமக்கு உணர்த்த போவது
அவர்களுடைய பிதற்றல்களும்
குமுறல்களும் தான்….

தன்னம்பிக்கை
இருக்கும் இடங்களில்
ஆறுதல்களுக்கு அதிக
வேலை இருப்பதில்லை…..

என்பதால் தன்னம்பிக்கையுடன் செயலாற்றுங்கள்
உங்களுக்கு வெற்றி நிச்சயம்

All Is Well…..

நன்றி சிவா for sharing

என்றும் அன்புடன்

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

nineteen − 13 =