September 06 2018 0Comment

ஸ்வப்னா_பர்மன் – தங்க மகள்

நாமும் வாழ்த்துவோம் 

ஸ்வப்னா பர்மன் ஆசிய விளையாட்டு ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்றவர்.
இவரின் தந்தை ரிக்ஸா தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இப்போது  வீட்டில் ஓய்வில் இருக்கிறார். 
தாய் தேயிலைத் தோட்டத் தொழிலாளி. 
ஸ்வப்னாவுக்கு இரு கால்களிலும் தலா 6 விரல்கள் என மொத்தம் 12 விரல்கள் இருப்பதால், அதற்கேற்ப உரிய ஷூக்கள் கிடைக்காமல் ஒவ்வொருமுறை தாவி குதிக்கும்  போதும் கடும் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அத்துடன் தாடை வலியுடன் அவதிப்பட்டு வந்த ஸ்வப்னா பர்மன் இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் பங்கேற்று ஹெப்டத்லானில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 

தகர செட்டிலான வீட்டில் வாழும் இவர்களை அவர்கள் வழிபட்ட காளி கைவிடவில்லை.

வாழ்த்துக்கள்  தங்கதேவதையே..!

Share this:

Write a Reply or Comment

one × 5 =