October 11 2018 0Comment

ஸ்ரீ_வடபத்திர_சாயி

ஸ்ரீ வடபத்திர சாயி:

#ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்.

#கோயில் தகவல்கள்:

சிறப்பு திருவிழாக்கள்: ஆனி ஆழ்வார் உற்சவம் ,#திருவாடிப்பூரம்,#எண்ணெய்க்காப்பு 

#கட்டிடக்கலையும் பண்பாடும்

கோயில்களின் எண்ணிக்கை:

3 (ஸ்ரீ வடபத்திர சாயி, ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ பெரியாழ்வார்)

#வரலாறு :

இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது.

#புராணம் :

ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். 

அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். 

சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு ‘காலநேமி’ என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் 

பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் “வடபத்ரசாயி” என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். 

இதனால் இந்த ஊருக்கு “ஸ்ரீவில்லிப்புத்தூர்” என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.

#ஆண்டாள் எண்ணெய்க்காப்பு :

திருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. 

நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும்.

 மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது. 

தமிழ்நாட்டின் அரசு #முத்திரையில் :

இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர். 

ஆனால் அதனை வடிவமைத்த ஓவியர் கிருஷ்ணா ராவ், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேற்கு கோபுரத்தை மையமாக வைத்து கோபுரத்திலுள்ள காளை வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் சிவ பார்வதி சிலைகள் உட்பட சேர்த்து வடிவமைத்தார்.

#ஆடிப்பூர தேரோட்ட உற்சவம் :

18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. 

தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும். பத்து கி.மீ தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம். தேரோட்ட உற்சவத்தில் வடம் பிடித்து மக்கள் இழுக்க, நின்ற தேர் நகர மறுத்தால் தேரின் பின் சக்கரங்களில் பெரிய கனமான மரத்தடியால் உந்தித் தள்ளுவர். 

எண்ணை தடவிய கனமான மர சறுக்குக்கட்டைகளால் தேரை நிறுத்தவும் பக்கவாட்டில் திருப்பவும் செய்வர்.

காலபோக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிக செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. மாற்று சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரை சீரமைத்து இழுத்தபோது அலங்கார மேலடுக்கு சாரம்,கலசம் சரிந்து கீழே விழுந்து பல உயிர்பலி நேர்ந்தது.

முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிசட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. 

தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.

அகஸ்திய முனி ஷண்பகராண்ய வனத்தில் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது வேட்டுவ இன அரசர்களைக் கண்டார். வில்லி மற்றும் புத்தன் என்பது அவர்கள் பெயர்.

அருகிலிருந்த ஆல மரத்தை காட்டி, இதனடியில் ஒரு குகை உண்டு. அந்த குகையில் வடபத்திர சாயி என்ற பெயரில் அந்த மகாவிஷ்ணு அனந்த சயனம் செய்கின்றார். அவருக்கு இந்த வனத்தில் ஒரு கோயில் கட்டு என்றார். அதற்குரிய தங்கமும்&வைரமும் அங்கு குபேரனே வைத்து காவல் செய்கிறான். உடனே இந்த திருப்பணியை தொடங்கு என கட்டளை இட்டார்.

அவர்களும் அகஸ்தியரின் வாக்கு வழி பொக்கிஷத்தை எடுத்து அந்த ஷண்பகராண்ய வனத்தை சற்று அழித்து ஒரு கோயில் கட்டினார்கள். 

அங்குறை வடபத்திர சயனரே இன்றும் காட்சி தருகிறார். கோயிலைச் சுற்றி, பின் ஒரு ஊர் தோன்றிற்று.வில்லி & புத்தன் என்ற அரசர்கள் உருவாக்கியமையால் வில்லிபுத்தூர் என பின்நாளில் வழங்கப்பட்டது. 

திருவேங்கடவன் என எல்லோரும் போற்றக்கூடிய வெங்கடாஜலபதி சுவாமியின் பத்தினியான பத்மாவதி தாயாரே, இந்த கோயிலின் பிராகாரத்தில் கோதை நாச்சியார் ஆக அவதாரம் செய்தாள்.

 விஷ்ணு சித்தர் என்ற ஆழ்வாரை, பெரியாழ்வார் என வைஷ்ணவம் போற்றும். அவரே இந்த கோதை நாச்சியாரை எடுத்து வளர்த்தார். 

அனுதினமும் பூமாலையும் பாமாலையும் ஒரு சேர செய்து வடபத்திர சாயிக்கு சூட்டி பூஜை செய்து வந்தார். கோதை பருவமடையும் காலத்தில் இறைவன் மேல் அளவிலா பக்தி பூண்டு பூமாலை தொடுக்க தந்தைக்கு உதவி வந்தார்.

ஒருமுறை மாலையைத் தான் அணிந்து எப்படி இருக்கும் என ஒரு கிணற்றில் எட்டிப் பார்த்து ரசித்தார். இதைக் கண்ட தந்தை விஷ்ணு சித்தர் கோதையை கடிந்து கொண்டார்.

அன்று இரவு இறைவன் பெரியாழ்வார் கனவில் வந்து, ‘இனி எப்போதும் கோதை சூடிய மாலையை மட்டுமேதான் நான் சூடுவேன். இதுவே எனது ஆசை’ என்றார். அன்றிலிருந்து கோதைக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் விளங்கிற்று. 

இந்த திருத்தலம், வராக க்ஷேத்திரம் ஆகும். ஆதிவராகர் ஹிரண்ய வதம் முடித்து, பின் சற்று அமர்ந்து, கோபம் தணிந்து, அகம் குளிர்ந்த தலம். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எப்படிப்பட்ட துக்கம் இருந்தாலும் அவை பொடிப் பொடியாய்ப் போகும் என்பது பலரும் அனுபவ பூர்வமாய் கண்ட உண்மை.

இங்கு திருமுக்குள தீர்த்தம் உண்டு. இதில் நீராடி வடபத்திர சாயியை வழிபட்டோர் அடையாத வெற்றியே இல்லை. கண்ணாடி தீர்த்தத்தில் தன் முகத்தை தானே தரிசித்தால் திருஷ்டி நீங்கும். 

கபால பீடை அகலும் என்பது கண் கண்ட உண்மை. இங்குள்ள விமானம் சம்சண விமானம், தேவர்களுடன் சிவனும் வந்து வணங்கும் விமானம் என்கிறது விஸ்வாமித்ர நாடி.

‘‘தேவருடனே முக்கண் மூர்த்தியும்

முயன்று தொழுமிவ் விமானமது

சம்சணமே’’ & என்ற பாட்டால் தெரியலாம். 

‘‘எழுந்தோடி வருவீர் வடபத்திர சயனங்கண்டு நிற்ப முடியாதது என் இவ் வையத்தே’’ & நம்மாழ்வார் அவதரித்த இந்த தலத்தை தென்புதுவை என்றும் வட

மகாத்மபுரம் என்றும் #ஸ்ரீதன்வபுரி என்றும் போற்றுகின்றனர். முன்னைய மன்னர்கள், விக்கிரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று வர்ணித்தனர்.

ஆண்டாள் ‘திருப்பாவை’ என்ற தமிழ் வேதத்தை ஓதிய தலம். ஸ்ரீகிருஷ்ணன், ரங்கமன்னாராக கருடன் மேல் வந்து ஆண்டாளை விவாகம் செய்த தலம். இந்த புண்ய க்ஷேத்திரத்தில்தான் பெரியாழ்வாருக்கு தனது கல்யாண கோலத்தைக் காட்டினார் திருமால்.

 அவர் எப்படி தரிசித்தாரோ அதை அப்படியே ஓவியமாக தீட்டினார் பெரியாழ்வார். பின் பாண்டிய, சோழ மன்னர்களால் ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் சிற்பங்களுடன் கோயில் அமைந்தது. 

தமிழக அரசு முத்திரையில் கம்பீரமாக காட்சி அளிப்பது இந்த வடபத்திரசாயின் #ராஜகோபுரமே. இந்த கோயிலுக்கு அனுதினமும் தும்புரு நாரதர், பிரம்மா, சனக ரிஷி, கந்தர்வர்கள், சந்திரன், கின்னர மிதுரர்கள், சூரியன் என யாவரும் வந்து ஹோயாளி பூஜை (விடிவெள்ளி தோன்றுகையில் செய்யும் பூஜைக்கு ஹோயாளி பூஜை என்று பெயர்) செய்து தத்தம் இடம் சேருகின்றனர். 

எடுத்த காரியம் ஜெயம் பெற, நல்ல புத்திரர்கள் உண்டாக, குழந்தை பாக்கியம் உண்டாக, கல்வியில் முன்னேற, வியாபாரம் அபிவிருத்தி அடைய, வடபத்திர சாயியை பதினெட்டு பௌர்ணமியன்று விரதம் இருந்து, மாலை வேளையில் தொழுது வந்தால் 

வேண்டியன சித்திக்கும் என்கிறார் அகஸ்தியர்.

‘‘நாடிய பொருள் கைகூடும் கல்வியும் மேன்மையும் உண்டாம் எண்ணியவாறு மணமுமீடேறும்; கொடிய பிணி கருகும். கடனுபாதை போம் &ஆயுளுமாங்கு பலமாகு மய்யன் வடபத்திரன் முழுமதி முயன்று மூவாறு திதி தொழுபவர்கே!’’

Share this:

Write a Reply or Comment

seventeen − seven =