ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்

Vastu - Andal Rangamannarஸ்ரீவில்லிப்புத்தூரில் தாயார் ஸ்ரீஆண்டாளின் திருக்கல்யாண மகோத்ஸ்வம் ஸ்ரீவைகானஸ பகவத் சாஸ்திர முறைப்படி நிகழும் மங்களகரமான ஸ்ரீஜய வருடம் பங்குனி மாதம் 12 – ம் தேதி வியாழக்கிழமை 26-03-2015 அன்று துவஜாரோஹணம் (கொடியேற்றம்) தொடங்கி ஸ்ரீஜய வருடம் பங்குனி மாதம் 24 – ம் தேதி (07-04-2015) அன்று புஷ்பயாகம் வரை நடைபெற உள்ளது. ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் 03-04-2015 அன்று இரவு 7 மணிக்கு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் ஆழ்வாரின் அருளிச் செயல்களான நாலாயிர திவ்ய ப்ரபந்த சேவா காலமும் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்து கொண்டு ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் திவ்ய தம்பதிகளின் பேரருளைப் பெற்று இன்பமுற வேண்டுகின்றோம்.

Share this:

Write a Reply or Comment

eighteen − 9 =