February 24 2022 0Comment

ஸ்ரீசெளமியநாராயணப்பெருமாள் திருக்கோயிலில் மாடு வழங்கியப்போது

ஸ்ரீசெளமியநாராயணப்பெருமாள் திருக்கோயிலில் மாடு வழங்கியப்போது 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ செளமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்ட மதிப்பீட்டின்படி 77 கிலோ தங்கத்தில் பிளேட் அடித்து தங்கம் ஒட்டும் பணி நடைபெற இருக்கின்றது. அதற்காக தமிழ்நாடு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம்  அவர்கள் ஏற்பாட்டின்படி கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி ஒரு கிலோ 580 மில்லி தங்கம் கொடுத்துள்ளனர். தற்போது இன்று இரண்டாவது முறை உபயமாக 1.50 கிலோ தங்கம் கொடுத்துள்ளனர்.

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், தலைவர் நாகராஜன், மாநில செயலாளர் கோவை கார்த்திகேயன், மாநில ஒருங்கிணைப்பாளர் சாய்சிவா ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீ சௌமிய நாராயண எம்பெருமானார் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் காந்தி, முன்னாள் தலைவர் வெள்ளைச்சாமி, சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோ தானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..அங்கே கோவிலில் வைத்து மாடு வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்..

 

Share this:

Write a Reply or Comment

four × three =