திருப்பதி கோவிலுக்கு
புரட்டாசி மாதம் செல்கின்ற வாகனங்களை விட
தமிழ்நாட்டின் எல்லா
பெரிய கோயில்களிலும்
அதன் அதன் விசேஷ நாட்களில்
கூடும் கூட்டத்தை விட
நேற்றும் இன்றும் திருச்செந்தூரில் நிறுத்தவே முடியாத அளவிற்கு வாகனங்களும்,
நடக்கவே முடியாத அளவிற்கு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் திருச்செந்தூருக்கு வந்துவிட்டது
போல் முருகனுக்காகவே சேர்ந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது
மக்கள் பரிகாரங்களையும் மூடநம்பிக்கைகளையும் தவிர்த்து கடவுளே மிகப் பெரியவன் என்கிற பெரும் நம்பிக்கை மக்களிடம் உணர்வுபூர்வமாக வந்துவிட்டது
போல் உணர்கின்றேன்
இது தொடரட்டும்
முருகன் புகழ் பரவட்டும்
சேவல் கொடி பறக்கட்டும்
எழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து
தொழும் போதும்
வேலும் மயிலும் என்பேன்
தொழுதே உருகி
அழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம்
விழும்போதும்
வேலும் மயிலும் என்பேன்
செந்தில் வேலவனே….
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்