September 06 2018 0Comment

வேலுண்டு வினையில்லை – ஒரு உண்மை கதை

                                            வேலுண்டு வினையில்லை – ஒரு உண்மை கதை

 

கிட்டத்தட்ட 2 வருடம்

கண் எரிச்சல் 

கண் அசதி

நீண்ட நேரம் படிக்க முடியாமை

சென்னையில் இதற்கான விடை 

தேடி 14  அலோபதி மருத்துவர்களுடன் சந்திப்பு 

நோயாளியை 

தொட்டு கூட பார்க்காமல் 

மருத்துவம் பார்க்க முடியும் 

என்பது போல் சில மருத்துவர்கள்

இன்னும் சிலரோ

A/C யில் தூங்காதீர்கள்

A/C யிலே இருக்காதீர்கள்

ஒய்வு தேவை

தூக்கம் தேவை

என அறிவுரை

இதில் ஒருவர்

உங்களுக்கு

வயதாகிவிட்டது

அதனால் கண்ணாடி போட்டே ஆக வேண்டும்

மற்றொருவர்

உங்கள் கண்ணில் நீரே இல்லை

இதற்கு மருந்தே இல்லை

Till your death இந்த மருந்து

போட்டு கொண்டே இருக்க வேண்டும்

இது ஒரு பக்கம் என்றால்

மறுபக்கம்

4 நாளைக்கு ஒருமுறை

என்னை பார்க்கவும்

மருந்து என் கிளினிக்கிலே வாங்கவும்

மருந்து அங்கேயே வாங்குகின்றேனா

என கேமராவில் பார்த்து கொள்ளகூடிய

மருத்துவர்கள் 

இயற்கை மருத்துவர்கள்  லிவர் தான் இதற்கு காரணம் என அதற்கு மருத்துவம்

என கிட்டத்தட்ட காமெடி பீஸ் போல ஆன பிறகு

தீடிரென்று ஒரு நாள் ஒரு விஷயம் 

மின்னலாக வந்து போனது

எச்சில் சோறு சாப்பிட்ட நாய்க்கே 

கபால மோட்சம் அளித்தது தாமிரபரணி…

அந்த மண்ணில் பிறந்த இந்த நாய்க்கு

நாயையே வாகனமாக வைத்துள்ள 

சிவத்தின் வித்து,

பொதிகை மண்ணின் செல்லக் குழந்தை 

செந்தூர் முருகன் வழி காட்டுவான்

என்ற நம்பிக்கை எப்படி  மறந்து போனது????

மன்னிப்புடன் 

வள்ளி நாயகனை 

நாய் நினைத்து கொண்டது

கூடவே கண்ணுக்காக

முடி எடுத்து பால் குடம் எடுப்பதாக

சபதம் எடுத்து கொண்டது

நினைத்த இடம் தஞ்சாவூர்

நினைத்த மாத்திரத்தில் தலை நிமிர்ந்து

பார்த்தவுடன் 

கண்ணில் பட்டு மனதில் பதிந்த வாசகம்

வேலுண்டு வினையில்லை 

அதிர்ந்து பராக்கு பார்த்தவண்ணம் வந்தவனுக்கு

இடது  பக்கம் வந்த மருந்து கடையில் ஒரு மருந்து 

வாங்கவேண்டிய தேவை இருந்ததால் அந்த மருந்தை வாங்கி கொண்டு அந்த விற்பனையாளரிடம்  பேச்சுக்கு கேட்டேன்

ஐயா இங்கு நல்ல கண் மருத்துவர் யாரேனும் உண்டா???

எதிரே உள்ள கல்பனா மருத்தவமனையில் ராஜசேகர் என ஒரு மருத்துவர் உண்டு.அவரை பாருங்கள் 

நல்ல மனிதர்…நல்ல கண் மருத்துவர்

ஏனோ பெரிய பிடித்தம் இல்லை இந்த மருத்துவரை பார்க்க காரணம் 

அரசாங்க மருத்துவமனையில் மட்டுமே இவரின் பிரதான வேலை

எந்த ஒரு பெரிய மருத்துவமனைக்கும் visiting doctor இல்லை

எந்த பந்தாவும் இல்லை

ஆட்கள் குறைவு

ஆனாலும் நீண்ட நேரம் காத்திருப்பு

என் முறை வந்தது

பார்த்தார் சார் உங்களுக்கு கண்ணில் லோக்கல் அனத்தீசியா சொட்டு மருந்து விட போகின்றேன்

கொஞ்சம் ஒத்துழைப்பு உங்கள் பக்கம் இருந்து தேவை

10 நிமிடம் காது குடைகின்ற பட்சை கண்ணில் விட்டார்.முடிவில் நீண்ட நாட்களாக உறுத்தலை தந்த/தரக் கூடிய  ஒரு பொருளை என் கண்ணில் இருந்துஎடுத்தார்

பிறர் செய்த தவறு எதுவும் இவர் செய்யவில்லை

இன்று கண்ணுக்கு வேலை வேண்டாம்

சிஸ்டம்,மொபைல் அதிகம் உபயோகம் வேண்டாம்

U r perfectly alright now

பீஸ் இதுவரை நான் பார்த்த கத்துக்குட்டி மருத்தவரை விட 2  மடங்கு குறைவு

அன்றிலிருந்து நான் அடைந்த 

ஆனந்ததிற்கு அளவே சொல்ல முடியாது.

ஒன்று  நான் எப்போதும் சொல்வேன்

நடமாடும் கடவுளே மருத்துவர்கள் தான்

என் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் 

இது நிருபணமாகி கொண்டு இருக்கின்றது

முருகனுக்கு நன்றி

நல்ல மருத்துவருக்கு நன்றி

முருகனுக்கு மிஞ்சியதோர் மந்திரமில்லை

ஓம் முருகா

ஒரு முருகா

திரு முருகா

அரு முருகா

வாழ்க வளமுடன்

Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

19 − five =