வேலவா
விளையாட்டுடனேயே
வாழ்க்கைப் பாடம் நடத்துவதில் உன்னைவிட தேர்ந்தவர் எவர் உண்டு…
காரிமங்கலத்திற்கு
ஸ்ரீராமருக்காக
சென்றிருந்த பொழுது
பயமறியா
ஒரு குட்டி குழந்தையுடன்
ஒரு செல்ல விளையாட்டு
என்னுடன் விளையாடும் இந்த குழந்தையின் பெயர் வேலவன்
எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி
எவ்வளவு இலக்கண சுத்தமான எம்பெருமானின் பெயர்
பெயருக்கு ஏற்றார் போலவே துளியும் பயம் இல்லாமல் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்கிற மனதுடன் முருகனுக்கு வீரபாகு போல என்னுடன் வந்தமர்ந்து கொண்டது
எனக்கு இருந்த பசியில்
வேலவன் வைத்திருந்த
இரண்டு 50/50 பிஸ்கட்டை
திருடி நான் தின்ற பொழுதும்
என்மேல் துளியும் சினம் கொள்ளாமல்
என்னுடனே ஒட்டிக்கொண்டது-
நான் செய்த தவறை மறந்து
என்னையும் மன்னித்து……
மறந்தால் தானே மனிதன்
தெய்வமாக மாற முடியும்
மன்னித்தால் தானே மனிதன் தெய்வமாகவே ஆக முடியும்
இது தெய்வ குழந்தை என்பதால் தான் வேலவன் என்று பெயர் சூட்டினார்களோ……
அந்த நொடியே
மறந்து
மன்னித்து
அடுத்த நொடி
அடித்து ஆட
வேலவனை தவிர
வேறு யாரால் முடியும்…
குழந்தையும் தெய்வமும்
ஒன்று தான் –
குழந்தையோடு எப்போதும்
குழந்தையாக இருப்பவர்களுக்குத்தான் இந்த உண்மை புரியும்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையாக மாறுபவர்களுக்கும்
இந்த உண்மை புரியும்…
விளையாடிய விளையாட்டு
வேலவனால் நடந்தது
விளையாடப் போகும்
விளையாட்டும் வேலவனால்
நடக்கும் நல்லபடியாக….
வேலவனக்கு நன்றி
தெய்வக் குழந்தைகள்
நம்முடன் வர
நம் வாழ்க்கையில் வந்து செல்ல
குழந்தையாக மாறுங்கள்…
குழந்தை தனத்தை கை விட்டு விட்டு
வேலுக்கும் நன்றி
எனக்கும் இந்த வேலையை கொடுத்ததற்கு…..
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்