September 11 2024 0Comment

வெள்ளையன்

வெள்ளையன்



தமிழக வணிகர் சங்கத்தின் தலைவர்

1999 – 2000 ஆண்டு சமயங்களில் சுதேசி பொருட்களை பயன்படுத்துவோம் என்கின்ற சிந்தனை தமிழகத்தில் மூலை முடுக்குகளில் மக்களிடம் கொண்டு சென்ற சமயங்களில் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்

குரல் கொடுத்தது மட்டுமன்றி பெப்சி, கோக் போன்ற அந்நிய குளிர்பானங்களுக்கு எதிராகவும் மக்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் குரல் கொடுத்தவர்

நம் சித்தாங்களுக்கு எதிராக இருந்தாலும் கடைசி வரை கதர் ஆடையை மட்டும் அணிந்தவர்

அன்னார் மறைவு செய்தி அதிர்ச்சியளிக்கின்றது, அன்னாரின் புகழ் பாடும் வணிகர்கள்‌ அன்னாரின் கொள்கையையும் கடைபிடித்தால் மட்டுமே அன்னாருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி ஆகும்

அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், வணிகர் சங்கத்திற்கும் இழப்பை தாங்கும் வல்லமையை தர தாயார் ஆண்டாளை ப்ரார்த்திக்கிறேன்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
மாநிலத் தலைவர் விசுவ ஹிந்து பரிஷத் -வட தமிழகம்

 

Share this:

Write a Reply or Comment

four × 3 =