July 14 2022 0Comment

வெற்றிக்கான ஒரு விஷயம்

வெற்றிக்கான ஒரு விஷயம்

உங்களுக்குப் பிடித்த
ஓர் இனிப்புப் பண்டத்தை நினைத்துக்கொள்ளுங்கள்

இப்போது உங்களுக்கு அந்தத் தின்பண்டம் தரப்படும்

நீங்கள் விரும்பினால்
அதை உடனே சாப்பிட்டுவிடலாம்

அதற்கு எந்தத் தடையும் இல்லை

ஆனால், நீங்கள் 20 நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருந்தால் அதே தின்பண்டத்தில் இன்னொன்றும் உங்களுக்குத் தரப்படும்

நீங்கள் இரண்டையும்
சாப்பிட்டு மகிழலாம்

இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்

கையில் இருக்கிற தின்பண்டத்தை உடனே சாப்பிடுவீர்களா?

அல்லது

20 நிமிடங்கள் காத்திருப்பீர்களா?

வால்டர் மிஷெல் என்ற அமெரிக்க உளவியலாளர் 1972ல் இப்படியொரு பரிசோதனையை நடத்தினார்.

அந்த ஊர்த் தின்பண்டமான மார்ஷ்மெல்லோ-வின் பெயரால்
The Marshmallow Test
என்று அழைக்கப்பட்ட இந்தப் பரிசோதனை

குழந்தைகளுடைய மன உறுதி மற்றும் சுய கட்டுப்பாட்டு திறனை சோதித்துப்பார்த்தது

யாரெல்லாம் தங்களுக்குப்
பிடித்த தின்பண்டத்தை உடனே சாப்பிடுகிறார்கள்

யாரெல்லாம் பொறுமையாகக் காத்திருந்து அதே தின்பண்டத்தை இரண்டாகச் சாப்பிடுகிறார்கள்
என்று வால்டர் மிஷெலின்
குழுவினர் ஆராய்ந்தார்கள்

இந்தத் தகவலையும்
அந்தக் குழந்தைகளுடைய
பிற்கால வாழ்க்கை
எப்படி அமைகிறது
என்கிற புள்ளிவிவரத்தையும் ஒப்பிட்டுப்பார்த்துச் சில முக்கியமான தீர்மானங்களை முன் வைத்தார்கள்

அதாவது

கிடைப்பதை உடனே சாப்பிட்டு விடுகிற குழந்தைகளைவிட
பின்னர் இரண்டாக
சாப்பிட்டுக் கொள்ளலாம்
என்று பொறுமையாகக்
காத்திருந்த குழந்தைகள்
இன்னும் நன்றாக படித்துள்ளதை கண்டறிந்தார்கள்

அவர்களுடைய சமூக மற்றும்
அறிவாற்றல் செயல்பாடுகள் மேம்பட்டிருந்ததையும்
கூடுதல் சுய மதிப்புணர்வுடன் வாழ்ந்து கொண்டிருந்ததையும் கண்டுபிடித்தார்கள்

அழுத்தத்தை நன்றாக கையாண்டு தங்களுடைய இலக்குகளை
இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டு எட்டிப் பிடித்ததையும் கண்டுபிடித்தார்கள்

ஆனால்

இந்த மன உறுதி ஒருவருக்குப் பிறவியிலேயே வருகிறதா?
அல்லது
இதைப் பயிற்சியின்மூலம் கற்றுக்கொள்ள இயலுமா?

இந்தக் கோணத்தில் சிந்தித்த வால்டர் மிஷெல்

The Marshmallow Test

என்ற தலைப்பிலேயே ஒரு பிரமாதமான புத்தகத்தை எழுதியுள்ளார்

சிறுவர்கள் மட்டுமில்லை, பெரியவர்களும்
மன உறுதியைப் பயிற்சியின்மூலம் பழகிக்கொள்ளலாம் என்று விளக்கி அதற்குப் பல உத்திகளையும் வழங்கியுள்ளார்

1.அதில் முக்கியமான உத்தி அவசரப்படக்கூடாது எதிலும் என்பதுதான்.

2.காத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அடைய இந்த உலகமே எப்போதும் தயார் நிலையில் காத்திருக்கின்றது.

3.வாழ்க்கையில் இரண்டு விஷயத்தை விட்டுவிட்டால் போதும்

எப்போதும் நமக்கு வெற்றி தான்

*ஒன்று மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது*….

*இரண்டு மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது*..

4.நீங்கள் அடைவதெல்லாம்
இறைவன் உங்களுக்குத் தரும் பரிசு

இழப்பதெல்லாம் நீங்கள் இன்னொருவருக்குத் தரும் வாய்ப்பு

இதை அனைத்தையும் ஞாபகம் வைத்துக் கொண்டு

நீ வெற்றிக்காக
போராடும்போது
வீண்முயற்சி என்று
சொன்னவர்கள்

நீ வெற்றி பெற்றபின்
விடாமுயற்சி என்பார்கள்

காலம் மாறும் காலமும் மாறும் இதுவும் எதுவும் கடந்து போகும்
காத்திருங்கள் எதிர்பார்த்து இருங்கள் பிரம்மாண்டமான வெற்றியை…..

என்றும் அன்புடன்
பொறுமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் ஒரு காலத்தில் வாழ்ந்த தற்போது ஓரளவு பொறுமையுடன் வாழ முற்பட்டு கொண்டிருக்கும்

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

ten + seventeen =