September 30 2018 0Comment

வீர துறவியுடன் ஒரு சந்திப்பு:

வீர துறவியுடன் ஒரு சந்திப்பு:

திரு.வைரமுத்து அவர்கள்
தாயாரை பழித்து
பேசிய பிறகு 
பெரிய கோபம்
என் மேல் எனக்கே
காரணம் 
இது 
ஏதோ ஒரு 
வைரமுத்து 
தான் இப்படி
என்றால் 
அடுத்த வேலையை 
நான் பார்க்க 
போயிருக்கலாம்
ஆனால்
ஓராயிரம் 
வைரமுத்துகள்
இந்து என்று
சொல்லிக்கொண்டு
பிராமணரை எதிர்க்கின்றேன்
என்கின்ற போர்வையில்
இந்து மதத்தை 
பெரிய அளவில் 
அசிங்கப்படுத்திக் கொண்டும்,
காயப்படுத்திக் கொண்டும் 
இங்கு இன்னும்
உலவி கொண்டு இருக்கின்றார்கள்
என்கின்ற வேதனை தான்
என்னை என் மேலேயே 
கோபம் கொள்ள செய்கின்றது…..
திரு.கௌதமன் (நாடக இயக்குனர் ???)
அவர்கள் 
என்னிடம்
சன் டிவி நேருக்கு நேர் 
நிகழ்ச்சியில்
ஏன் பிராமணன் 
கமல் இந்த தவறை 
செய்தபோது
நீங்கள் கேள்வி கேட்கவில்லை
என்று  தாயார் பிரச்சினையை
பிராமணர் vs பிராமணர் அல்லாதோர் 
என திசை திருப்ப 
முயன்றபோது தான்
நான் சிந்திக்க 
ஆரம்பித்தேன்…..
சில கட்சிகள் 
காலத்திற்கு 
தகுந்தாற்போல்
தங்களை மாற்றி 
கொள்ளாமல்
இன்னும் துருபிடித்த 
தேய்ந்த 
காரணங்களை கொண்டு
அரசியல் செய்ய 
முற்படுவதை 
உணர்ந்த பிறகு
நான் அரசியல்
குறித்த என்
பார்வையை 
சுய பரிசோதனை
செய்து கொள்ள 
ஆரம்பித்தேன்
அதன் விளைவால்
ஓரளவு
நான் அனுமானித்த 
விஷயங்கள்: 
1.
ஒவ்வொரு இந்துவும் 
இன்று மனம் உடைந்து 
மனம் வருந்துவதற்கு காரணம்
முகம் தெரியா 
முஸ்லிமோ,
கிறிஸ்துவரோ இல்லை 
2. 
இந்துவாக பிறந்து
இன்றும் 
எனது,
என்னுடையது 
என்று சொல்லி கொண்டு 
தூய இந்துவாக 
செய்ய
வேண்டிய கடமைகளை 
செய்யாமல்
ஆக்கபூர்வ சிந்தனை
இல்லாமல்
உலவிக் கொண்டிருக்கும் 
இந்துக்கள் 
ஒவ்வொருவருமே
இதற்கு காரணம்.
3.
மனைவி,
மக்களோடு
மன நிம்மதி தேடி 
ஒரு இந்து 
அதிகம் போகின்ற 
இடம் கோவில்
ஆனால் அங்கு
பணம் இருக்கும் 
மனிதனுக்கு
சிறப்பு தரிசனம்
கோயில்களில்
உயர்ந்த ஜாதிக்கு
தனி மரியாதை
இருக்கிறவனுக்கு தான் கடவுள்
இல்லாதவனுக்கு இல்லை கடவுள்
என்கின்ற கோட்பாடுகளால் 
தன்மானத்துடன் வாழ
விரும்பும்
சாமானிய மனிதன்,
ஆசைப்பட்டு அதிகம் 
செல்லும்
இடமான கோவில்களில்
அளவிற்கு அதிகம்
அசிங்கப்பட்டு 
நிற்கும் நிலை
வந்தாகிவிட்டது
4.
எல்லாவற்றிற்கும்
மேலாக கோயில்களில் 
நடைபெறும் 
கொலைகளும்,
கொள்ளைகளும் 
சாமானிய இந்துவை 
அதிகம் இந்து 
மதத்தில் இருந்து
அந்நியப்படுத்திவிட்டது
5.
மேலும்
அரசாளும் மன்னர்களும் 
தமிழகத்தில்
குடியை பிரதானப்படுத்தி 
மக்களை
மாக்கள் ஆக
ஆக்கியதால்
இந்து மதம் 
திட்டமிட்ட 
தாக்குதலுக்கு 
உள்ளாகி
இன்று
சில அரசியல்வாதிகளாலும்
போலி மத சார்பின்மை 
பேசும் முட்டாள்களாளும் 
இந்து மதத்தை  
எடுப்பார் கை பிள்ளையாக,
சவலை பிள்ளையாக 
மாற்றும் முயற்சி
நடைபெற்று வருகின்றது…..
இதை முறியடிக்க
ராமருக்கு உதவிய 
அணிலாக
நான் என்னை 
மாற்றி கொண்டு
சில விஷயங்களை 
முன் எடுக்கின்றேன்
அதன் முன்னோட்டமாக 
வருகின்ற 
அக்டோபர் 14, 2018
அன்று 
நாமக்கல்
பொம்மை குட்டை மேடு 
ஸ்ரீ லக்ஷ்மி திருமண மாளிகையில் 
இந்து நேற்று
இந்து இன்று
இந்து நாளை
என்கின்ற தலைப்பின் கீழ் 
கோதையின் பாதையில்
சாமனிய இந்து 
சரித்திரம் படைக்க 
இந்து எழுச்சி மாநாடு 
நடத்த திட்டமிட்டு உள்ளேன்
அது சம்மந்தமாக
இன்று வீர் துறவி 
திரு.ராம.கோபாலன் 
அவர்களை
சந்தித்து
உரையாடியபோது சில பல
அரிய சீரிய அறிவுரைகளையும் 
வழங்கினார்….
இந்த சந்திப்பு 
என் பார்வையில்
பெரிய தெளிவை கொடுத்தது.
நன்றி அத்தனையையும் 
சாத்தியப்பட வைத்த
நண்பர்களுக்கு
வெற்றியை நோக்கிய முதல் படியில் நின்று 
இந்த கடிதம் உங்களுக்காக….
என்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

two + five =