June 25 2018 0Comment

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில்:

கௌமாரியம்மன் கோவில்:
முந்திய பாண்டிய நாட்டின் ஒரு பகுதிதான் இன்றைய வீரபாண்டி ஆகும். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ராஜேந்திரபாண்டியன், தன் தம்பியான இராச சிங்கபாண்டியனுக்கு மலைவளம் கொண்ட இந்த ஆற்றுப்பகுதியை கொடுத்து ஆட்சி நடத்த கேட்டுக் கொண்டான். 
இராச சிங்கனின் மூதாதையர் கட்டிய கோவில்கள் வைகை நதியின் கரையோரத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து அதனை சீர்படுத்தினான் என்பது வரலாறு.
இராச சிங்கனின் மூதாதையான வீரபாண்டி மதுரையில் ஆண்டு வரும் பொழுது அவனது முன் ஜென்ம வினையால் பார்வை இழந்தான். 
அவன் இறைவனை நோக்கி கடுமையான விரதம் இருந்து வேண்ட, இறைவன் அவருக்கு பிரத்தியட்சமாகி, இந்த வீரபாண்டி தலத்தில் உள்ள கௌமாரி தவமியற்றும் இடம் சென்று வேண்டினால் நீ கேட்டது கிடைக்கும் என்றார். 
இங்கு வந்து அம்மனையும் ஈஸ்வரனையும் வேண்ட பார்வை கிடைக்கப் பெற்றான். கண்பாார்வை கிடைக்கப் பெற்ற மன்னன், ஈஸ்வரனுக்கு கண்ணீஸ்வரர் என்ற பெயரிட்டு கற்கோவில் அமைத்தார். 
இந்த மன்னரின் பெயரால் இந்த தலமும் வீரபாண்டி என்ற பெயர் பெற்றது. திருக்கோவிலுக்கும்  கௌமாரி அமமன், திருக்கண்ணீஸ்வரர் என்று ஆயிற்று.
இங்கு கௌமாரி அம்மன் என்ற பெயரில் உமாதேவி ஈஸ்வரனை நோக்கி இயற்றினார். 
அதுசமயம் அங்கு வந்து தொல்லை கொடுத்த அசுரனை  அருகம்புல்லை முக்கழுப்படையாக மாற்றி அவனை அழிக்க, ஈஸ்வரன் தோன்றி சிவப்பிரசாதம் தர கௌமாரி அம்மன் கன்னி தெய்வமாக மாறினாள். 
அவள் பூசடித்த சிவலிங்கமே திருக்கண்ணீஸ்வர் ஆனார்.
கௌமாாரி அம்மனையும் திருக்கண்ணீஸ்வரரையும் மனதார வேண்ட தீராத நோய் தீரும், குறிப்பாக கண்பாார்வை குறைந்தோர் நல்ல நிவர்த்தி பெறுவர், பாவங்கள் நீங்கிடப்பெற்று நல்ல முன்னேற்றம் பெற்று செல்வ வளம் பெறுவர் என்பது ஐதீகம்.
கௌமாரி அம்மன் திருக்கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் முல்லை ஆற்றின் வலதுபுறம் திருக்கண்ணீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 
மூலவர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். இடதுபுறம் உள்ள சன்னதியில் அறம் வளர்த்த நாயகி வீற்றிருக்கிறார். மூலவரின் வலது புறம் சமயக்குரவர்கள் சன்னதி உள்ளது. 
வெளிப்பிரகாரத்தில் விநாயகர், முருகன் வள்ளி தெய்வானையுடன் தனிச்சன்னதியில் உள்ளனர். சண்டீஸ்வர், தஷிணாமூர்த்தியுடன் பைரவர், துர்க்கை, நவகிரகங்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
முல்லை நதியின் தீர்த்தமும் திருக்கோவிலின் தீர்த்தமாகவும் தல விருட்சமாக வேம்புவும் உள்ளன. இந்த தலம், மலையின் அடிவாரத்தில், சுருளி மலை, தேக்கி ஆகியவற்றை கடந்து வரும் நீர் மூலிகை செடிகளின் மருத்துவ குணத்துடன் வருவதால் நோய் தீர்க்கும் சக்தியுடன் உள்ளது.
அன்னை வழிப்பாட்டிற்கு முக்கியத்துவம்  தர வேண்டும் என்பதற்காகவே இத்தலம் வருபவர்கள் கௌமாரி அம்மனை முதலில் வழிபட்டு அடுத்து திருக்கண்ணீஸ்வர முடையாரைத் தரிசிக்கின்றனர். 
மேலும் இது கன்னி  தெய்வமாக இருப்பதால் ஆற்றல் மிக்கவளாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடி ஏற்றத்துடன் 22 நாட்கள் சிறப்பாக நடைபெறும். 
அம்மனுக்கு விரதம் மேற்கொண்டு, மாவிளக்கு ஏற்றி,  மண் கலயத்தில் முல்லை ஆற்று நீரை ஏந்தி வந்து,  இங்குள்ள அத்திமரக் கொம்பிற்கு அம்மன் சிவனாக பாவித்து, நீரை ஊற்றுகின்றனர். அது சமயம் பூப்பல்லக்கு,  தேரோட்டம் நடைபெறுகின்றது. 
வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, விநாயக சதுர்த்தி, தைப்பூசம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி, பிரதோஷம் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை சுமந்து வருதல் என்று பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவது கண் கொள்ளா காட்சி. 
மதுரையிலிருந்து 86 கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து, வத்தலகுண்டு, பெரியகுளம் வழியாக தேனி வந்தும்  இங்கு வரலாம்.
Share this:

Write a Reply or Comment

thirteen + 14 =