July 24 2022 0Comment

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை

வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை

#நீல்_ஆம்ஸ்ட்ராங்

இவர் தான் நிலவில்
முதன் முதலில் கால் வைத்தவர்…

ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர்
யார் தெரியுமா?…

பல பேருக்கு தெரியாது…

அவர் எட்வின் சி ஆல்ட்ரின்…

இவர் தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி

ஆல்ட்ரின் அமெரிக்காவின்
விமானப் படையில் பணிபுரிந்தவர்
மேலும் விண் நடை
அனுபவம் உள்ளவர்
அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்

நீல் ஆம்ஸ்ட்ராங்க்
அமெரிக்காவின் கப்பல்
படையில் வேலைபார்த்தவர்

மிகுந்த தைரியசாலி
என்பதால் தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
அவர் கோ-பைலட்
அதாவது இணை விமானி

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து,
“பைலட் பர்ஸ்ட்”
என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது

ஆனால்
ஆல்ட்ரினுக்கோ
மனதில் சின்ன தயக்கம்

இடது காலை எடுத்து வைப்பதா?… வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல

நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்

புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது

புதை மணலாக இருந்து
உள்ளே இழுத்துவிட்டால்
எரி மணலாக இருந்து
காலை சுட்டுவிட்டால்

தயக்கத்தில்
மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை

சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது

“கோ-பைலட் நெக்ஸ்ட்”

நீல் ஆம்ஸ்ட்ராங்
கட்டளை வந்த அடுத்த
நொடி காலடி எடுத்துவைத்தார்

உலக வரலாறு ஆனார்

உலக வரலாறு
ஒரு நொடி தயக்கத்தில்
மாற்றி எழுதப்பட்டது

திறமையும் தகுதியும்
இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை

முதலாவது வருபவரைத்தான்
இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல

தயக்கம் பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்

இனி நிலவை
பார்க்கும் போதெல்லாம்
இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…

ஒரு நிமிடத் தயக்கம்
நம்முடைய மிகப்
பெரிய வெற்றிகளை
தடுக்கும்
தடுத்து விடுகிறது
தடுக்கக் கூடியது

தயக்கங்களே நம்
முன்னேற்றத்திற்கு
ஒரே தடை
எனவே நீ வெற்றி பெற வேண்டுமானால்
தயவு செய்து
அதை உடை

நன்றி கருத்துப்பதிவு
Dr ஜேக்கப் ஜான் பிலிப்

நீங்கள் அனைவரும் சிகரம் தொட என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

one × 2 =