விமானம் விளையாட்டு மைதானமான தினம்::
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்:
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
இன்று ஆண்டாள் வாஸ்து குடும்பத்தின் நண்பர்கள்
29 பேர் நேபாளத்தில் உள்ள காட் மண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இமயமலையை மிக அருகாமையில் சென்று பார்த்து,தரிசித்து வரக்கூடிய ஒரு விமான பயண வாய்ப்பை உருவாக்கி கொண்டோம்.
பின் திட்டமிட்டபடி இமயமலையை பார்த்து மகிழ்ந்து திரும்பினோம்.
இதில் என்ன பெரிய விஷயம் என்றால் சாதாரணமாக இருந்த
நாங்கள் அசாதாரணமான நிகழ்வுகளை சாத்தியமாக்க வேண்டும் என்கின்ற
நோக்கத்தில் பயணப்படுகின்றன
இந்த வேளையில் ஒரு விமானத்தையே வாடகை எடுத்து, மொத்த விமானத்தை யே வாடகைக்கு எடுத்து
நமக்காக 2 விமானிகள் 2 விமானப் பணிப்பெண்கள் என்று படைசூழ
ஒரு மணி நேரம் வானத்தில் பறந்த
இந்த பயண அனுபவமானது
எந்த காலகட்டத்திலும்
மறக்க முடியாத
ஒரு இனிமையான சுகானுபவம்……
அதிலும் இயற்கையை
அதன் குகையிலேயே
சந்தித்த திருப்தி இன்று கிடைத்தது…..
மொத்த விமானமே
எங்கள் குழுவிற்கு
விளையாட்டு மைதானமாகி
போன தினம் இன்று……
விளையாட்டை விரும்பி நடத்துபவனை
விளையாட்டாக சந்தித்த தினம் இன்று…..
பரலோக பரந்தாமனை
சினிமாவில் [பார்ப்பது போல்
பார்த்த தினம் இன்று…….
எங்கள் அனைவருக்கும் இந்த அற்புதமான சுகானுபவத்தை கொடுத்த ஆண்டாள் நாச்சியாருக்கும், நரசிம்மருக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றிகள்
வாழ்க்கை வாழ்வதற்கன்று……
கொண்டாடுவதற்கு…..
கொண்டாட்டம் தொடரும்…..
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: