வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 3

ஸ்ரீ

Vastu - Old-and-Newஎனக்கு நினைவு தெரிந்து என்னுடைய வாஸ்து அனுபவத்தில் கீழ்கண்ட Dialogue – ஐ ஏறத்தாழ நான் வாஸ்து பார்த்த மக்களில் 40% பேர் சொல்லி கேட்டிருக்கின்றேன்.

“உங்களுக்கு பூர்வீகம் ஆகாது. தயவுசெய்து வேறு இடத்திற்கு போய் விடுங்கள் என எங்கள் ஜோதிடர் சொல்லி இருக்கின்றார். அதனால் தான் வீடு மாறி இந்த வீட்டில் இருக்கின்றோம்”.

ஜோதிடர் பூர்வீகம் ஆகாது என்று சொன்னவர்களின் பூர்வீக வீட்டை ஆராய்ந்து பார்த்ததில் அந்த வீடு பெரிய வாஸ்து தவறுகளுடன் தான் இருந்திருக்கின்றது என்பதை கண்டு வியந்திருக்கின்றேன். இப்படி தவறான பூர்வீக வீட்டில் இருந்து பூர்வீகம் ஆகாது / ஒத்துவராது என்று வீடு மாறுவது நல்லதே.

ஜோதிடர் பூர்வீகம் ஆகாது என்று சொன்ன உடன் அதை கேட்பவர் சிரமம் பார்க்காமல் ஒரு நல்ல வாஸ்து நிபுணரை வரவழைத்து அவர்கள் வசிக்கும் பூர்வீக வீடு, மாற ஆசைப்படும் வீட்டை காண்பித்து அவர்களுடைய கருத்தையும் கேட்டு கொள்ள வேண்டுகின்றேன். காரணம் நல்ல வாஸ்து பலம் உள்ள பூர்வீக வீடு (நல்ல தெருக்குத்து; தென்மேற்கு இயற்கையாக உயரம்; வடகிழக்கு இயற்கையாக பள்ளம்) கண்டிப்பாக எந்த விதத்திலும் கெடுதலை கொடுக்காது என்பது உண்மையாகையால் நல்ல வாஸ்து பலன் பொருந்திய பூர்வீக வீட்டை விட்டுவிட்டு வெளியே போகும் போது நல்ல பலனை அப்படி வெளியே போகிறவர்களுக்கு கொடுக்காது என்பது நான் அறிந்த உண்மை.

பொதுவாக உயிர் பாதிக்காமல் இருக்கவும், குழந்தை பிறப்புக்காகவும், திருமண தடை நீங்கவும், பணப் பிரச்சினை அகலவும் ஜோதிடர் ஆலோசனை படி வீடு மாறுபவர்களுக்கும் பரிகாரம் சொன்ன ஜோதிடர்களுக்கும் தெரியாத உண்மை:

99.99% பேர் பூர்வீக வீட்டில் எந்த தவறோடு வாழ்ந்து வந்தார்களோ அதே தவறோடு தான் புதிய வாடகை வீட்டிலோ அல்லது சொந்தமாக தங்களுக்கு கட்டிய புதிய வீட்டிலோ வாழ்ந்து வருகின்றார்கள் என்பது தான் ஆச்சரியமான/அதிர்ச்சியான உண்மை.

என்னைப் பொறுத்தவரை வாஸ்துவில் இந்த விஷயம் ஏன் இப்படி இருக்கின்றது என்பது விடை தெரியா மர்மமாகவே நீடிக்க போகின்றது.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

three × 5 =