வாஸ்து விடை தெரியா மர்மங்கள் – 6

ஸ்ரீ

life-changing-message-from-the-universe

எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு 10 தினங்களுக்கு முன்.

சார், என் மனைவியின் சித்தப்பா வீட்டில் அவருடைய  2 – வது மகன் தற்கொலை செய்து கொண்டு விட்டார். நீங்கள் தயவுசெய்து வந்து வாஸ்து பார்த்து அந்த வீட்டை மாற்றிக் கொடுக்கணும் என்று அவர் என்னிடம் சொன்ன உடன் அதற்கு நான் ஒரு முக்கிய விஷயமாக பழனி வரை செல்கின்றேன்.நான் பழனி போய்  வந்த பின் அந்த வீட்டை பார்த்து சொல்கின்றேன் என்று சொல்லிவிட்டு ஆகஸ்ட் 12, 20015 மரணத்தை சந்தித்த அந்த வீட்டிற்கு ஆகஸ்ட் 30, 2015 அன்று சென்றேன்.

மகனை இழந்த தாயின் கண்ணீர் மிகக் கொடியது என்கின்ற விஷயத்தை மறுபடியும் அனுபவபூர்வமாக பார்த்தேன் அன்று. தாத்தா, பெரியப்பா, மனைவி, கணவன், குழந்தைகள் என அந்த குடும்பம் என்னைப் பார்த்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார்கள் நான் என்னப் பேசப் போகின்றேன் என்ற எதிர்பார்ப்புடன்.

அம்மா! நான் இப்போ வாஸ்து பார்க்க வரவில்லை. நமக்கு தெரிந்த குடும்பதில் ஒரு துர் மரணம் ஏற்படுத்தி விட்டு போயிருக்கும் துயரத்தில் பங்கு பெற தான் உங்களை நான் இன்று சந்திக்க வந்திருக்கின்றேன்… என்று சொல்லிவிட்டு சில கேள்விகளை அவர்கள் முன் வைத்தேன். அந்த கேள்விகளும், அதற்குண்டான அவர்களுடைய பதிலும் கீழ்கண்டவாறு: –

கேள்வி: –  உங்கள் பூர்வீக வீடு கிழக்கு மூடப்பட்ட வீடா?

பதில்: –    ஆம்

கேள்வி: –  அம்மா! உங்கள் அம்மா சுமங்கலியாக இறந்து போனார்களா?

பதில்: –    ஆமாம்

கேள்வி: –  உங்கள் அம்மா இறக்கும் போது ஒரு செய்தி (Message) சொல்லிவிட்டு இறந்து போயிருக்கிறார்கள். அது உங்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. புரிந்திருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. உங்கள் அப்பாவை நீங்கள் எவ்வளவு நன்றாக பார்த்து கொள்கிறீர்களோ அந்த அளவை  வைத்து தான்  நீங்களும் உங்கள் உடன் பிறந்த 5 சகோதர, சகோதரிகளும் நன்றாக இருப்பீர்கள். உங்கள் அப்பா சிறிய அளவில் துயரப்பட்டாலும் நீங்கள் அனைவரும் பெரிய அளவில் துக்கப்பட வேண்டி இருக்கும். அவரை நீங்கள்  எப்போதும்  உங்களுடன் வைத்து கொள்ள முயற்சி எடுக்கவும்.

பதில்: –    சார்! என் பையன் இறப்பதற்கு இரண்டு நாள் முன் வரை என் அப்பா இங்கு தான் இருந்தார்.

கேள்வி: –  உங்கள் குடும்பத்தில் இது போன்ற துயர சம்பவம் வேறு எதுவும் நடந்தது உண்டா? அல்லது இது போல் துயர சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உங்கள் இறந்து போன மகன் சென்று வந்தாரா?

பதில்: –    ஆம். என் சகோதரியின் 2 – வது மகன் இதே போன்று 5 மாதங்களுக்கு முன் இறந்து போனான். அந்த வீட்டிற்கு என் இறந்து போன மகன் சென்று வந்தான்.

கேள்வி: –  அப்படி என்றால் உங்கள் சகோதரியின்  இறந்து போன குழந்தை அவரின் இரண்டாம் குழந்தை அல்ல.மூன்றாவது குழந்தையாக தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு உங்கள் இறந்து போன அம்மா ஏதோ ஒரு குறிப்பை உங்களுக்குத் தந்து விட்டு இறந்து போயிருக்கிறார்கள் அதை முதலில் கண்டுபிடியுங்கள்.

பதில்: –    சார், என் பெரிய தம்பியை  தான் என் அம்மாவிற்கு ரொம்ப பிடிக்கும். அவன் மார்பில் தான் என் அம்மாவின் உயிர் பிரிந்தது (பதில் சொல்லும்போதே வேறு இடத்தில் வசிக்கும் அந்த பெரிய தம்பி வருகின்றார்).

கேள்வி: –  அப்போது அவர்களிடம் சொல்கின்றேன் உங்கள் வீட்டில் மூன்றாவது குழந்தை அனைத்தும் பாதிக்கப்படும் என்று.

பதில்: –   உடனே பெரிய தம்பி சொல்கின்றார். எனக்கு ஒரே ஒரு குழந்தை தான்.

கேள்வி: –  நான் உடனே சொன்னேன் ஐயா உங்கள் வீடு வடக்கு மூடப்பட்ட வீடு. தென்மேற்கில்  கிணறோ / பள்ளமோ உள்ள வீடு. சரியா?

பதில்: –    ஆமாம். நான் குடியிருக்கும் வீட்டில் வடக்கில் ஜன்னல் இல்லை. தென்மேற்கில் பஞ்சாயத்து தண்ணீர் தொட்டி உள்ளது என்று.

கடைசியாக

சரிங்க சற்று பார்த்து முடிவு எடுப்போம்…. இப்போ வாஸ்து எதுவும் பார்க்க வேண்டாம். நான் எப்போ கூப்பிட்டாலும் வந்து இலவசமாக உங்களுக்கு உதவி செய்து கொடுக்கின்றேன். இருந்தாலும் உங்களுக்கு இரண்டு விஷயங்கள் கடைசியாக சொல்ல விரும்புகின்றேன்

  1. உங்கள் மனைவியை மலை வாசஸ்தலத்திற்கு அழைத்து செல்லுங்கள்
  2. உங்கள் மாமனாரை  நன்கு பார்த்து கொள்ளுங்கள். உங்கள் மாமியாரின் மரணம் மிகப்பெரிய செய்தியை உங்களுக்கு கொடுத்து உள்ளது. மாமியாரை வணங்கவும்.

அது ஏனோ தெரியவில்லை.அவர்களுடனான அன்றைய என் பேச்சு முழுக்க இறந்த அந்த பாட்டியை பற்றி மட்டும் தான் இருந்தது-என்னை அறியாமல்..

பேச்சை முடித்து நான் கிளம்ப எத்தனித்த  போது வெளியூரில் இருந்து  வநது இருந்த அந்த பெரிய தம்பி சொல்கின்றார் சற்று கலவர முகத்துடன்: –

“இன்று எங்கள் அம்மாவின் நினைவு நாள்” என்று.

நான் இந்த இடத்தில் கூறிக் கொள்ள விரும்புவது:

  • மேலும் தன் பிள்ளைகள் எந்த இழப்பையும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காகவும், குறிப்பாக தனக்கு மிகவும் பிடித்த மகனுக்கு கஷ்டம் வந்துவிடவேக் கூடாது என்பதற்காகவும் தான் இறந்த பாட்டி அவர் இறந்து, குறிப்பாக என்னை அவர் இறந்த அந்த தினத்திலே வரவழைத்து, வாஸ்து பார்க்க அழைத்திருகின்றார்  என்பது தான் நிதர்சனமான உண்மை.
  • பெரியவர்களை போற்றி பாதுகாக்கவும்
  • எந்த இறப்பையும் கூர்ந்து கவனிக்கவும்
  • விதியை மதியால் வெல்லவே முடியாது. ஆனால் விதியை கணிக்க முடியும்.
  • ஒரு வருடத்திற்கு முன் சம்பவம் நடந்த இதே வீட்டின் வழியாக சென்று இன்னொரு வீட்டிற்கு வாஸ்து பார்த்திருக்கின்றேன் – இவர்கள் தவறை சுட்டி காட்டியபடி

விதியை கணித்தேன் – இருந்தாலும் மனிதனால் தான் அதை வெல்லவோ, மாற்றவோ முடியாதே?!

எனக்கு தொலைபேசியில் தகவல் சொன்னவரும், இறந்து போன இளைஞரின் அண்ணனும் என்னுடைய Facebook – ல் Friends ஆக இருக்கின்றார்கள் என்பது உபரித் தகவல்.

சரியாக நமக்கு தெரியும்; மிகச் சரியாக நமக்கு கூறப்படும் / கூறப்பட்டிருக்கும்; மிகத் தெளிவாக நமக்கு புரியும் / புரியவைக்கப்பட்டிருக்கும்; ஆனால் நம்மால் எதையும் மாற்றவே முடியாது – எந்த கால கட்டத்திலும் என்பதை மற்றும் ஒரு முறை எனக்கு தெளிவாக புரிய வைத்த சம்பவம் இது.

மாற்ற முடியாததை மாற்றம் செய்ய முடியாதை ஏன் எனக்கு மட்டும் புரிய வைத்தாய் என்கின்ற என் கேள்வி என் வாஸ்து அனுபவத்தில் விடை தெரியாத கேள்வியாகவே தொடரப் போகின்றது

கிருஷ்ணார்ப்பணம்.

 

 திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. Wish my Bawa and I met you earlier. God descides. ..Thank you Andal Sir. God bless you

    Reply

Write a Reply or Comment

twenty − fifteen =