ஸ்ரீ
சென்னை மாநகரில் மிகப் பெரிய பணக்காரர்களுக்கு என்று அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் நிறுவனங்களில் முதன்மையான நிறுவனத்தின் உரிமையாளர் எனக்கு இருக்க கூடிய 1000 மிகப்பெரிய பணக்கார வாடிக்கையாளர்களில் ஒருவர். சமீபத்தில் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் அவருடைய 5 கட்டிடங்களுக்கு வாஸ்து ஆலோசனை வழங்க சென்றிருந்தேன். அதில் ஒரு மனையில் உள்ள வீடுகள் எல்லாம் 5000 சதுர அடி விஸ்தீரணம் கொண்டது. ஒவ்வொரு வீடும் பணத்திற்கு வஞ்சனை இல்லாமல் அற்புதமாக வடிமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது அவர் என்னிடம் சொன்ன விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படவும் / வருத்தப்படவும் வைத்து விட்டது.
ஆச்சரியப்பட்டதற்கு காரணம் வாஸ்து முறை படி கட்டப்பட்ட (கிழக்கு / வடக்கு – முழுவதும் ஜன்னல்; தென்கிழக்கு தெற்கு உச்ச வாசல்; தென்கிழக்கு – சமையலறை; சதுரமான மனையில் சதுரமான வீடு) வீட்டை வாங்குவதற்கு ஒருவர் கூட முன் வரவில்லை. இதற்கு காரணமாக தெற்கு வாசல் போகக்கூடாது என்று ஜோதிடர் சொல்லி விட்டார் என்று சொல்லிவைத்தாற்போல் சிலரும், வடக்கு பார்த்த வாசல் தான் சிறந்தது என்று Internet – ல் படித்ததால் தெற்கு வாசல் வேண்டாம் என்று பலரும் சொன்னதாக கூறினார்.
அவரே, மேற்சொன்ன நிலைமைக்கு மாறாக வடக்கு உச்ச வாசல் உள்ள வீட்டை அனைவரும் கட்டும் தருவாயிலேயே பதிவு செய்து விட்டார்கள் என்றும் கூறினார்கள். இந்த தகவலை கேட்டு நான் அதிர்ந்து விட்டேன். காரணம் அவர் உடனே விற்றதாக சொன்ன வீடுகளுக்கு வடகிழக்கு வடக்கு பகுதியில் உச்சவாசல் இருந்தாலும் அந்த வீடுகள் அனைத்துமே வடக்கு பொது சுவர் உள்ள மற்றும் வடக்கு முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்ட வீடுகள். அதைவிட நான் வருத்தப்பட்ட விஷயம் இந்த வீடுகளுக்கெல்லாம் வடகிழக்கு மூலையில் படிக்கட்டு வேறு இருக்கின்றது.
10 கோடி ரூபாய் கொடுத்து வீடு வாங்குபவர்கள் வாஸ்து நிபுணர் ஒருவரை அந்த வீட்டை பார்ப்பதற்கு ஈடுபடுத்துவது பணம் விரயம் என்று நினைத்து தனக்கு தானே மருத்துவம் பார்த்து கொள்ள நேரிடும் போது நாட்டில் மருத்துவமனைகள் அதிகரிக்கத் தானே செய்யும்.
மணப்பாறை முறுக்கு மாயவரம் மாட்டுக்கு தான் கிடைக்கும் என்பது போல் எது யாருக்கு கிடைக்கும் என்று கடவுள் முடிவெடுத்துவிட்ட பிறகு ஒரு ஜோதிடரா அதை தவறாக்க முடியும்.
தவறான வீட்டை தேர்ந்தெடுப்பவர்களின் வாழ்க்கை என்னவாகும் என்பதற்கு விடை நமக்கு தெரிந்து இருந்தாலும் தெரிய வேண்டியவர்களுக்கு இது விடை தெரியா கேள்வியாகவே இருந்துவிட்டு போகப் போகின்றது.
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
April 19, 2015
Dear sir i believe your vasthu ……we have more problem my home 1 year eight month close and keep i am not happy next vacation kindly visit and rectify my problem …