வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 1

ஸ்ரீ

Vastu - Karmaவட ஆற்காடு – திருப்பத்தூரில் வாஸ்து பிதாமகன்களான திரு.பிரம்மானந்தம் ரெட்டி அவர்களும், திரு.திருப்பதி ரெட்டி அவர்களும் வெவ்வேறு தருணங்களில் ஆலோசனை கொடுத்து கட்டிய வீடு அதன் வீட்டு உரிமையாளருக்கு  அது கட்டப்பட்ட சில காலங்களுக்கு உள்ளாகவே பிரச்சினைகளை அதிகம் கொடுத்ததால் “என் மேல் நம்பிக்கை வைத்து என்னை வாஸ்து பார்க்க“ அழைக்கின்றார்.

அவருக்காக வாஸ்து பிதாமகன்கள் கட்டிய வீட்டை பார்ப்பதற்கு நானும்  சென்றேன் பார்த்தேன். பிரமாண்டமான வீடு, அற்புதமான வடிவமைப்பு,  விதிகள் துல்லியமாக பின்பற்றப்பட்டு கட்டப்பட்ட தவறு செதுக்கப்பட்ட வீடு. ஆனாலும் உரிமையாளரின் மனைவி அவரை பிரிந்து தன் மகன்களுடன் தனியாக இருக்கின்றார் என்பதை அவரை பார்த்த பின் என் அனுபவ ஞானத்தில் தெரிந்து கொண்டேன். அதை மனதில் வைத்து கொண்டு, வீட்டை பார்த்த பின் நான் அந்த உரிமையாளரிடம் சொன்னேன் வீட்டில் எந்தவித குறைபாடும் இல்லை. அருமையான வீடு இது. தயவுசெய்து வீட்டின் குறிப்பிட்ட மூலையில் கொட்டப்பட்டிருந்த மாங்காய்களை எடுத்து மாற்றி வேறொரு பக்கம் வைக்கவும் என்று கூறினேன். மேலும் நான் ஒரு குறிப்பிட்ட அறையை திறந்து வைக்க சொன்னபோது, தன் மனைவி தன்னை பிரிந்து செல்லும் போது குறிப்பிட்ட அந்த அறையை (பூஜை) பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டாள் என்ற விஷயத்தை தெரிவித்தார்.எது எப்படி இருந்தாலும் நான் சொன்னேன் இந்த அறையை திறந்தே ஆக வேண்டும் என்று.

வேறு என்ன செய்ய வேண்டும் இந்த வீட்டில் எனக் கேட்டார். நான் திரும்பவும் சொன்னேன்

  1. அவர் ஒரு கல்லூரி அதிபராக இருந்தாலும் மாங்காய் ஊறுகாய் வியாபாரத்திற்காக வீட்டில் அவர் அடுக்கி வைத்திருந்த மாங்காய்களை முதலில் இடம் மாற்ற வேண்டும்.
  2. பூட்டிய அறையை திறக்க வேண்டும்

என்று சொல்லி விட்டு விடைபெறும் போது அந்த வீட்டின் உரிமையாளர் இவ்வளவு பெரிய வீட்டிற்கு நீங்கள் இரண்டு சின்ன விஷயங்களை தானே தவறு என்று சொல்கிறீர்கள். அதனால் நீங்கள் உங்கள் Fees – ஐ அதற்கு ஏற்றார் போல் குறைத்து கொள்ள கூடாதா? என்று கேட்டார். நான் அவருக்கு மறுப்பு தெரிவித்து விட்டு

இல்லை ஐயா! நான் உங்களுக்கு சுட்டி காட்டிய இந்த விஷயம் உங்கள் உயிர் காக்கின்ற விஷயம். என் நேரத்திற்காக ஏற்கனவே நீங்கள் ஒத்து கொண்ட கொடுக்க வேண்டிய தொகையை பேரம் பேசி என் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

உடனே அந்த உரிமையாளர் இது என்ன வாஸ்து! மாங்காயை எடு; அறையை திறந்து வை – னு என்று முணுமுணுத்தவாறே கொடுக்க வேண்டிய பணத்தை அரை மனதுடன் என்னிடம் கொடுத்தார்.

நான் பணத்தை வாங்கிய பிறகு ஐயா, எது எப்படியோ இந்த தவறை உடனே திருத்துங்கள் தயவுசெய்து என்று கூறிய போது வீட்டின் உரிமையாளர் இப்போது முடியாது நான் இன்று ஊர் போய்விட்டு வந்து செய்கின்றேன் என்று பதில் சொன்னார் சற்று ஏகத்தாளத்துடன். நானும் அது உங்கள் இஷ்டம் என்று வெளியே வந்த போது அவருடைய புதிய Toyota கார் பக்கத்தில் 20 – 22 வயது மதிக்கத்தக்க அவர் driver நின்று கொண்டிருந்தார். அவரிடம் நான் சென்று தம்பி உங்களுடன் வெளியூர் போவதாக பெரியவர் சொன்னார். பார்த்து போ தம்பி என்று கூறியதை ஆமோதித்த அந்த driver தம்பி “சரிங்கண்ணே நான் பார்த்து போறேன்” என்று சொல்லி என்னை வழி அனுப்பி வைத்தார்.

நாங்கள் அந்த வீட்டை விட்டு கிளம்பும்போது சாயங்காலம் 4 மணி. அடுத்த நாள் இரவு ஈரோடு Oxford Hotel – ல் தங்கியிருந்த என்னிடம் என் உதவியாளர் திரு.அபுதாலிப் ஒரு சாயங்கால Paper – ஐ எடுத்து கொண்டு ஓடி வந்தார். அதில் காலை 4 மணி அளவில் கள்ளக்குறிச்சி அருகே வண்டி கவிழ்ந்து 2 பேர் பலி – என்று செய்தி வந்திருந்தது. Photo – வை பார்த்தபோது அதிர்ந்து போனேன். காரணம் நேற்று சாயங்காலம் நான் பார்த்து பேசிய பெரியவரும், நான் பார்த்து பேசிய அவருடையை driver – ம் அந்த Photo – வில் இருந்தனர்.

நல்ல வாஸ்துபடி உள்ள வீடு என்றாலும் நம் கர்மா நாம் கட்டிய நல்ல வீட்டை எப்படி மாற்றி நம்மை எப்படி முடிக்கிறது என்பதற்கு இந்நிகழ்ச்சியை விட வேறு உதாரணத்தை என்னால் சொல்ல முடியாது.

இதுவரை நல்லதே செய்யாதவர்கள் நல்லதை செய்யுங்கள் – இன்றிலிருந்தாவது

தயவுசெய்து நல்லது செய்பவர்கள் நிறைய செய்யுங்கள்; நிறைய, நிறைய செய்யுங்கள்.

இந்த மொத்த விஷயத்தில் எந்த தவறும் செய்யாத அந்த driver தம்பி இறந்து போனது என்னைப்பொறுத்தவரை விடை தெரியாத மர்மமாகவே என்றும் இருக்கப் போகின்றது.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

three × 1 =