வாஸ்து விடை தெரியா கேள்விகள் – 2

ஸ்ரீ

Vastu (2)

வாஸ்து வாடிக்கையாளர் ஒருவர் என் அலுவலகத்திற்கு வந்தார். வந்தவர் அவருக்கு அரைகுறையாக சொந்தமான இடத்தில் வாஸ்துபடி தொழிற்சாலை கட்டி இருந்தாலும் அவருக்கு எதிராக மொத்த குடும்பமும் ஒரு பக்கமாக இருக்கின்றது என்றும் நான் இப்போ என்ன செய்வது என்று ஒரு நியாமான கேள்வியை என் முன் வைத்தார்.

நான் அவரிடம் சொன்னது.

  1. தொழிற்சாலையில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு வாடகை இடத்தில் புதியதாக தொழிற்சாலை அமைக்கவும்.
  2. தொழிற்சாலையையும், வீட்டையும் அபகரிக்க நினைக்கும் உறவிற்கே இரண்டையும் விட்டு கொடுத்து விடவும்.
  3. வாழ்க்கையில் இனிமேல் கடைசிவரை, ஏமாற்றிய உறவுகள் தங்கள் தவறை தாங்களே உணரும் வரை அவர்களுடன் எந்தவிதமான தொடர்பிலும் இருக்காதீர்கள் அது பெற்ற அம்மா,அப்பாவாக இருந்தாலும் கூட நல்லதோ,கெட்டதோ நீங்கள்,உங்கள் மனைவி,உங்கள் குழந்தைகள் என ஒரு வட்டம் இட்டு சிறிய வாழ்க்கை வாழவும்.
  4. என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு வர வேண்டிய பூர்வீக வீடு மிகத் தவறான வீடு. அது உங்கள் கைக்கு வரக் கூடாது என்பதற்காக உங்கள் உறவினர்கள் மூலம் கடவுள் உங்களுக்கு நல்லது செய்கின்றார். இங்கு சொத்து போவதால் பணம் போகின்றது என்று பார்க்காமல் உங்கள் உயிர் காப்பாற்றப்படுகின்றது என்று சந்தோஷப்படுங்கள்.
  5. மேலும் உங்களுக்கு முழுச் சொந்தமில்லாத இடத்தில் வாஸ்துபடி தொழிற்சாலை கட்டியிருக்கின்றேன். நல்ல வாஸ்து பலம் வாய்ந்த வாடகை வீட்டில் இருக்கின்றேன் என்கின்ற விஷயங்கள் என்னைப் பொறுத்தவரை உங்களை காப்பாற்றுகின்றது என்று தான் சொல்வேன் என பதில் கூறி அனுப்பி வைத்தேன்.

என்னுடைய பதில் சரியா? தவறா? என்பதை காலம் அவருக்கு உணர்த்தும். அவர் உணர்ந்தபின் நான் அதைப்பற்றி பின் விவரிக்கின்றேன்.

இருந்தாலும் ஒரு தவறான பூர்வீக வீடு; நல்ல வாஸ்து பலம் வாய்ந்த வாடகை வீடு; நல்ல வாஸ்துபடி மாற்றியமைக்கப்பட்ட தொழிற்சாலை இந்த மூன்றில் தவறு எப்படி வென்றது என்பதும்; எப்படி தவறு மட்டுமே வெல்கின்றது என்பதும் என்னைப் பொறுத்தவரை என் வாஸ்து அனுபவத்தில் விடை தெரியா கேள்வியாகவே இருக்கப் போகின்றது.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

5 + 20 =