வாஸ்து விடை தெரியாத கேள்விகள் – 1

ஸ்ரீ

unanswerable-questions

சென்ற வாரம் ஒரு தொலைபேசி அழைப்பு.

பேசியவர் ஒரே புலம்பல். பணம் ரொம்ப நெருக்கடியாக இருக்கின்றது. என்ன செய்வது?

கேள்வி: – அம்மா! இப்போ எந்த வீட்டில் இருக்கிறீர்கள்?

பதில்: –    Apartment – ல் வாடகை இருக்கின்றோம். வாடகையை ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

கேள்வி: – அம்மா! உங்களுக்குத்தான் 2 வாஸ்து பலம் வாய்ந்த காலி மனைகள் உள்ளதே. அங்கு இருக்க வேண்டியது தானே?

பதில்: –    வீடு கட்ட ரூபாய் செலவாகுமே! நான் எங்கே போவது அவ்வளவு பணத்திற்கு.

கேள்வி: – அம்மா! உங்களுடைய  ஒரு மனை பக்கா நல்ல தெருக்குத்து மனை. அந்த இடத்தில் ஒரு சிறிய வீடு ரூ.3 லட்சத்திற்குள்ளோ அல்லது ஒரு குடிசை வீடோ கட்டி போகலாமே? அங்கு போய்விட்டால் எல்லாம் நன்றாகி விடுமே. மேலும் வாடகை பிரச்சினையும் இல்லாமல் போய்விடுமே என்கின்ற என் கேள்விக்கு ஏனோ மறு முனையில் பதிலே இல்லை.

நாம் நன்றாக இருக்க வேண்டுமானால் சிறிது தேவைகளை சுருக்கி கொண்டாலே போதும். கண்டிப்பாக நன்றாக இருக்க முடியும் என்கின்ற நிதர்சன உண்மை எல்லோருக்கும் சரியாகவே புரிந்திருக்கின்றது. பல பேருக்கு அதிலும் குறிப்பாக கஷ்டபடுகின்றேன் என்று சொல்பவர்களுக்கு மட்டும் ஏனோ இந்தப் புரிதல் மட்டும் புரிதல் அளவிலேயே இருக்கின்றது.

வாஸ்து படி நல்ல, சிறந்த இடத்தை ஒருவன் வைத்திருந்தும் வாடகை வீட்டில் இருந்து ஏன் கஷ்டப்படவேண்டும் என்கின்ற கேள்வி என் வாஸ்து அனுபவத்தில் ஒரு விடையில்லா கேள்வியாகவே இருக்க போகின்றது….

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

3 − two =