வாஸ்து vs ஜோதிடம்: –

ஸ்ரீ

Silhouette-question-mark

சமீபத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு,

சார் நான் சென்னை பெரம்புரிலிருந்து பேசுறேன். நீங்கள் சொன்னபடி வீடு கட்டிட்டோம். ஆனால் ஜோசியக்காரர் இப்போ எங்களுக்கு நல்ல நேரம் இல்லை. உடனே இருக்கின்ற வீட்டை மாற்றி விடவும் என்கிறார்.

நான் என்ன செய்வது…

இந்த கேள்விக்கு நான் சொன்ன பதில்: –

அம்மா! நான் சொன்னபடி உங்கள் கணவர் வீடு கட்டி இருந்தால் நீங்கள் வீடு மாறக்கூடாது. நான் சொன்னதுக்கு மாறாக கட்டி இருந்தால் ஜோதிடர் சொல்படி கேட்கவும்.

அதற்கு அந்த பெண்

நீங்கள் சொன்னபடி தான் கட்டியிருக்கின்றோம்.

அதற்கு என் பதில்

அப்படின்னா வீடு மாற வேண்டாம்.

என் பதில் கேட்ட அந்த பெண் உடனே காம்பவுண்டு மட்டும் பக்கத்து வீட்டுக்காரருடன் சேர்ந்து பொதுவாக போட்டிருக்கின்றோம் மற்றபடி நீங்கள் சொன்னபடி தான் வீடு கட்டியிருக்கின்றோம்.

அம்மா இரண்டு தடவை அழுத்தி என் பதிலை சொன்ன உடனே வீடு கட்டுவது சம்பந்தமாக நீங்கள் செய்த ஒரு தப்பை சொல்கிறீர்கள்…

உங்களுக்கு நான் என் பதிலை 3 வகையாக பிரித்து சொல்கின்றேன் கேட்டு கொள்ளுங்கள்:

  1. வீடு மிகச் சரியாக கட்டப்பட்டு இருந்தால் நீங்கள் வீடு மாற வேண்டாம். நீங்கள் சரியாக கட்டி இருக்கின்றீர்களா என்பதை கட்டிய வீட்டின் Photo – க்களுடன் என்னை வந்து பார்க்கவும்.
  2. நீங்கள் சொன்ன ஜோதிடர் கத்து குட்டியாக இருக்கலாம். அதனால் இரண்டாவது அபிப்பிராயம் வாங்கி கொள்ளவும் நல்ல ஜோதிடரிடம்.

அதற்கு அந்த பெண்ணின் பதில்

நீங்கள் தான் நாங்கள் வாடகை வீட்டில் இருந்தபோது குழந்தைகள் “தத்து சம்பந்தமாக” நல்ல ஜோதிடரை பார்க்க சொன்னீர்கள். அதை வைத்து தான் நான் சேலத்தில் சென்று பார்த்தேன். அந்த ஜோதிடருக்கும் உங்களைத் தெரியும் என்றார். அவரை பார்த்த பின் மேலும் ஒரு ஜோதிடரை பார்த்தோம். அவர் வீடு மாறத் தேவையில்லை என்கின்றார் என்ன செய்வது?

ஒரு ஜோதிடர் வீட்டை காலி பண்ணச் சொன்னார் என்கின்ற விஷயத்தை சொன்ன நீங்கள் ஏனம்மா இன்னொரு ஜோதிடர் வீட்டை காலிபண்ணத் தேவையில்லை என்று சொன்னதை சொல்லவில்லை.

அப்படி என்றால் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் உங்கள் வீட்டை காலி பண்ண வேண்டும்.அதற்கு மேல் அந்த வீட்டில் இருந்தால் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என்கின்ற எண்ணம் அதிகம் வந்து விட்டதால் தான் இந்த பிரச்சினை… எனவே என்னை வந்து பார்க்கவும். நான் என் கருத்தை கூறுகின்றேன்.

3. மூன்றாவது அபிப்பிராயமாக நான் மதிக்கும் மூன்று பெரிய ஜோதிடர்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள். அதில் ஒருவர் ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் Fees வாங்கக் கூடியவர். இன்னொருவர் பணமே வாங்க மாட்டார். இந்த இரண்டு பேரின் நேரம் வாங்குவது கடினம். ஆக இந்த இரண்டு பேரும் உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு தகுந்தாற் போல் ஒரு ஜோதிடரை சொல்கின்றேன் உங்கள் திருப்திக்காக. வேண்டுமானால் அவரிடம் ஒரு           ஆலோசனை பெற்று கொள்ளவும்.

எது எப்படி இருந்தாலும், யார் எப்படி சொன்னாலும் நல்ல வீடாக இருந்தால் வீடு மாற வேண்டிய அவசியம் கண்டிப்பாக கிடையவே கிடையாது. முடிவு உங்களுடையது என கூறிவிட்டேன்.

இவ்விடத்தில் என்னைப்பற்றி தெரிந்த நண்பர்களுக்கு சில கேள்விகள்: –

  1. ஜோதிடம் உண்மையா?
  2. வாஸ்து உண்மையா?
  3. ஜோதிடம் பெரியதா?
  4. வாஸ்து பெரியதா?
  5. ஜோதிடம், வாஸ்து இரண்டும் பொய்யா?
  6. ஜோதிடம், வாஸ்து இரண்டும் சமமானதா?
  7. இந்தப் பெண்ணின் கேள்விக்கு உங்களது பதில் என்ன???
  8. இந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன முடிவெடுப்பீர்கள்?
    1. இன்னொரு ஜோதிடரை பார்ப்பீர்களா?
    2. வேறு வீட்டிற்கு மாறுவீர்களா?
    3. கட்டிய வீட்டில் ஏதேனும் தவறு இருந்தால் அதை கண்டுபிடித்து சரி செய்வீர்களா?
  9. இங்கு கடவுளுக்கு வேலை உண்டா?

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

2 comments

  1. JOTHIDAM UNMAI

    VASTHUVUM UNMAI

    JOTHIDAM SEPERATE TRACK VASTHU SEPERATE TRACK

    JOTHIDAM NADANTHATA SOLLUM NADAKAPORATHA SOLLUM BUT NOT POSSIBLE TO SOLVE OUR PROBLEMS
    IF ANY ONE GOOD VASTHU HOUSE DEFINITELY YOU WILL LEAD GOOD LIFE ITS TRUE
    FOR 8th question
    amma veetai sari seithu antha veetil valungul nallathea nadakkum
    thavaran theruparavai or therukuthu illatha patchathil

    kadavul unmai kadavul nambikkai kandipaga vendum

    valaga valamudan

    Reply
  2. வாஸ்துவும்,ஜோதிடமும் சமமானதுதான்.அதனை கணித்து கூறுபவர்களிடம் தான் வேறுபாடு உள்ளது.
    என்னைப்பொறுத்த வரை கட்டிய வீட்டை விட்டு வேறு வீடு செல்ல மாட்டேன் ( தாங்கள் கூறியபடி சரியாக கட்டியிருந்தால்).
    இதில் நமது நம்பிக்கையும் நேர்மறை சிந்தனையும் முக்கியம்.
    கடவுளுக்கு முக்கிய பங்கு (இறை நம்பிக்கை மூலம்)கண்டிப்பாக உண்டு.

    Reply

Write a Reply or Comment

two × two =