April 03 2015 0Comment

வாழ்ந்து வாழ்…

ஸ்ரீ

Vastu - APC - Ramco PRRதமிழ்நாட்டின் தலைச்சிறந்த பெரிய தொழில் நிறுவனமான ராம்கோ குழுமத்தின் தலைவர் திரு.பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா அவர்களை மரியாதை நிமித்தமாக 02-04-2015 அன்று சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. எங்கள் இருவரையும் சந்தித்து பேச வைத்த பெருமை ஆண்டாளையே சேரும்.

எங்களின் நீண்ட உரையாடலில் ஆன்மிகம், அரசியல், குடும்ப நலன் என்று நிறைய விஷயங்களை பேசி கொண்டோம். நான் திரு.பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா அவர்களுடனான சந்திப்பை முடித்து கிளம்பும் போது என்னிடம் அவர் கேட்ட கேள்வி….

உங்களுக்கு ஏதும் உதவி தேவையா!!!

இந்த ஒரே ஒரு கேள்வி தான் அவரை இன்றும், என்றும் தமிழகத்தின் மிகப்பெரிய பணக்காரராக வைத்திருக்கின்றது, வைத்திருக்கவும் போகின்றது.

உங்கள் எல்லோருக்கு இதன் மூலம் நான் சொல்லி கொள்ள விரும்புவது கீழ்கண்ட 2 விஷயங்களை மட்டுமே…

  1. எப்படியாவது அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வாழுங்கள்.
  2. அடுத்தவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு வளர்ச்சியுடன் கூடிய வாழ்க்கையை வாழ்வதற்கு முற்படுங்கள்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

nine + nineteen =