வானம்பாடிகள் சிறகுகளை நம்பி….
கடைசியாக என் காதலியை நான் பார்த்த போது என் காதலி அணிந்திருந்த உடையின் நிறமானது எனக்கு பிடித்த, எனக்கு பிடிக்கும் என்று அவளுக்கு மட்டும் தெரிந்த, எனக்கு பிடித்ததால் அவளுக்கும் ரொம்ப, ரொம்ப பிடித்து போன ராமர் நீலத்தில் தான்.
அந்த ஞாபகத்தில் என்னுடைய எல்லா நல்ல தருணங்களிலும், நீல நிற உடை அணிந்து சந்தோஷப்பட்டு கொள்வேன்….
நீல வண்ணத்தை
எங்கு பார்த்தாலும்
இனம் புரியாத ஒரு சந்தோஷம்
இன்றைக்கும் என்றைக்கும் என்னுள் உண்டு….
நேற்று நாமக்கல்லில் என்னை சந்திக்க விருப்பப்பட்டு சந்தித்த பின் வேலகவுண்டம்பட்டி சகோதரி தங்கம் சேகருடன் புகைப்படம் எடுத்தபோது,
ஞானிக்கு சிங்கத்தின் நகத்தில் இருந்தும் கூட
ஞானம் கிடைப்பது போல
நீலத்தில் இருந்து எனக்கும் ஞானம் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது
நீலத்தின் பயணம் மிக நீளமானது.
பொருட்களில் தொடங்கிய
use and throw கலாச்சாரம் இப்போது மனிதர்களில் முடிந்திருக்கும் இந்த வேளையில்
தங்கள் வேலையை ஓரமாக வைத்துவிட்டு என்னையும் தங்கள் வாழ்வில் சேர்த்துக்கொண்டு வாழும் எனக்கே எனக்கான இதுபோன்ற சில உறவுகள் துணைகொண்டு முன்னோக்கி பயணம் தொடர்கின்றது.
வானம்பாடிகள் வழுக்குப்பாறைகள் தங்களை பறக்க வைக்கும் என்கின்ற எண்ணத்தை விட்டொழித்து தன் சிறகுகளை எப்போது நம்புகின்றதோ
தன் சிறகுகளை நம்பி எப்போது சிறகை விரிக்கின்றதோ
அப்பொழுது அதன் பயணம் ஆரம்பமாகின்றது என்கின்ற உண்மை எல்லோருக்கும் உடனடியாக புரிந்து விடுவதில்லை.
எனக்கு இப்போதுதான் புரிந்தது சிறகை விரித்து இருக்கின்றேன்
வெற்றி கிடைக்கும் என்கின்ற மிகப்பெரிய நம்பிக்கையில்…..
உங்களுக்கும் சிறகு இருக்கின்றது என்பதை நம்புங்கள்…
நாளை நமதே…
நன்றி அனைத்திற்கும்.
Dr.ஆண்டாள் பி சொக்கலிங்கம்
Share this: