October 12 2018 0Comment

வானமாமலை

வானமாமலை:

திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 

108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். 

நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலியிலிருந்து #திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

புராண பெயர்(கள்): நாங்குநேரி, தோத்தாத்ரி, உரோமசேத்திரம், ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்), நாகணை சேரி

பெயர்:வானமாமலை

 

ஊர்:வானமாமலை

கோயில் தகவல்கள்

மூலவர்:தோத்தாத்திரிநாதன்

உற்சவர்:தெய்வநாயகப் பெருமான்

தாயார்:ஸ்ரீதேவி, பூமிதேவி

உற்சவர் தாயார்:ஸ்ரீவரமங்கை

தல விருட்சம்:மாமரம்

தீர்த்தம்:சேற்றுத்தாமரை தீர்த்தம்

பிரத்யட்சம்:உரோம(ரிஷி) முனிவர்

#நந்தவர்த்தன விமானம்:

ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு. 

பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. 

உரோம(ரிஷி) முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமசேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரிஎனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.

#தைல அபிஷேகம் :

இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைல அபிடேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும்.

#கோயில் தோற்றம்பற்றிய தொன்மவியல் :

ஆழ்வார் திருநகரியை ஆண்ட மன்னரான காரிக்கு குழந்தேப் பேறு இல்லாததால், திருக்குறுங்குடிக்குச் சென்று வேண்டினார். 

மன்னரின் கனவில் தோன்றிய நம்பிராயர் எப்படிபட்ட குழந்தைவேண்டும் என்று வினவினார். அதற்கு காரி தங்களைப்போன்ற ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்றார். 

அவ்வறே ஆகும் என உரைத்த நம்பிராயர், இங்கிருந்து கிழக்கே சென்றால் நான்கு ஏரிகள் சூழ்ந்த இடத்தில் எறும்புகள் சாரைசாரையாகச் செல்லும். அதற்கு நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்கொண்டிருப்பான். 

அந்த இடத்தில் அகழ்ந்தால் வானமாமலை தென்படுவான். அவன் கேட்டதை அருளுவான் என்றார். அதன்படி அந்த இடத்தைக் கண்டறிந்து அங்கே மன்னன் அகழ்ந்தபோது, அங்கே வானமாமலைப் பெருமாள் கிடைத்தார். 

நாங்குநேரி என்ற அவ்வூரிலேயே அவரை நிலையாட்டி அவருக்கு கோயில்கட்டி அவரை வழிபட்டார். அதன்பிறகு நம்பிராயர் அருளியபடியே காரி மன்னருக்கு மகனாக நம்மாழ்வார் பிறந்தார்.

#ஸ்ரீவானமாமலை மடம் :

ஸ்ரீவானமாமலை மடத்துக்கு இதுவே தலைமைப்பீடமாகும். இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாக்களில் பாடப்பெற்றது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

Share this:

Write a Reply or Comment

16 + twelve =