வல்வில்ராமன் திருக்கோயில்:

முன்னொரு காலத்தில் சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார்.
அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். #ஜடாயு ராமா, ராமா என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர்.
ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார். இதைக்கண்டு வருந்திய ராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார்.
உடனே ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய #ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.
#சிறப்பம்சங்கள்:
அதிசயத்தின் அடிப்படையில் இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பான ஒன்று ஆகும்.
சுவாமிமலையிலிருந்து திருவைகாவூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் 4 கி.மீ., தொலைவில் திருப்புள்ள பூதங்குடி உள்ளது.
Share this: