August 15 2022 0Comment

வந்தே மாதரம்..

வந்தே மாதரம்..

நன்றி மாரியப்பன் ஐயா, கல்லூர் (திருநெல்வேலி) அவர்களுக்கு…….
நெல்லை மண்ணுக்கு நிகர் நெல்லை மண்ணே.
இந்திய தாய் திருநாட்டில்
எத்தனை மதங்கள் இருந்தாலும்
எத்தனை ஜாதிகள் இருந்தாலும்
எத்தனை கட்சிகள் இருந்தாலும்
தேசம் என்று வரும் பொழுது
அத்தனையையும் உடைத்து
நாடே முக்கியம் என்று தான்
நாம் அணி திரள்வோம்
என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இதுவரை
இருந்து இருந்தாலும்
தள்ளாத வயதில்
கடும் வெயிலில்
எதிர்காற்று தன்னை
தள்ளக்கூடிய சூழ்நிலை
இருந்தாலும்
நம் நாட்டின் பிரதமர் அழைப்பை ஏற்று நம் தேசிய கொடியை தன் மிதிவண்டியில் கம்பீரமாக பறக்க விட்டுக் கொண்டே செல்லும் இந்த பெரியவரை நிச்சயம் இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாகவே பார்க்கின்றேன்
குறிப்பாக
நான் என்னுடைய அதிநவீன காரில் அதிவேகமாக பிரயாணம் செய்யும் போது தான் இவரை பார்த்து/
கடக்க நேரிட்டது
இவரைப் பார்த்த பின் நான் வெட்கத்தில் தலை குனிந்தேன்
காரணம் என்னுடைய வாகனத்தில் அந்த நொடி வரை தேசியக்கொடியை நான் பறக்க விட வில்லையே என்று…
என்ன செய்ய வேண்டும்
இனி நான் என்பதை
இந்த படித்த முட்டாளுக்கு
படிக்காத மேதை வகுப்புக்கு வர சொல்லி பாடம் எடுக்காமலேயே சொல்லி கொடுத்து விட்டு சென்று விட்டார்
Mariappan “The Great”
வாழ்க பாரதம் வளர்க பாரதம்
வந்தே மாதரம்
ஜெய்ஹிந்த்
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

10 − six =