June 05 2018 0Comment

வணக்கம் சென்னை – மே 30, 1999 

மே 30, 1999 

என் தந்தை இறந்த தினம் இன்று…

சரியாக காலை 6.45 AM-க்கு அவர்

உயிர் பிரிவதற்கு 

15 நிமிடங்கள் முன் வரை 

நன்றாக இருந்த அவர் இறந்ததற்கு காரணம் சென்னை மட்டுமே…

ஆம்புலன்சிற்கு வழி விடாத சென்னை மக்கள்

பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில்  பட்டம் பெற்று மருத்துவமே தெரியாமல் மருத்துவம் பார்த்த  சென்னை டாக்டர்…..

உயிர் காக்கும் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் கூட வைத்திருக்காத டிரைவர்

என 11 முத்தான காரணங்கள்…..

இருந்தாலும்  சென்னையை ஏனோ இன்று வரை என்னால் வெறுக்க முடியவில்லை…….

அதற்கு காரணம் 

என் தந்தையின் இரண்டு கண்களால் பார்வை பெற்ற சென்னையை சேர்ந்த முகம் தெரியா இரண்டு மனிதர்கள் இன்றும் சென்னையில் ஏதோ ஒரு மூலையில் உலவி கொண்டு இருகின்றார்கள்  என்கின்ற ஒத்தை விஷயம் தான் ..

நம்மை வைத்து செய்தவர்களுக்கும் நிறைய நல்லதை திருப்பி கொடுப்போம்…..

வணக்கம் சென்னைக்கு விசில் போடுங்க….

போட்டுகிட்டே இருங்க……

கனத்த

இதயத்துடன்……

உங்கள் 

ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

 

 

Share this:

Write a Reply or Comment

two × 2 =