September 30 2018 0Comment

லட்சுமி நாராயண சாளக்கிராமம்: 

லட்சுமி நாராயண சாளக்கிராமம்: 
ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது
லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்: நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது
ரகுநாத சாளக்கிராமம்: இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது
வாமன சாளக்கிராமம்: இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது
ஸ்ரீதர சாளக்கிராமம்: வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது
தாமோதர சாளக்கிராமம்: விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது
ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்: மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது
ரணராக சாளக்கிராமம்: விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது
ஆதிசேட சாளக்கிராமம்: பதினான்கு சக்கரங்களும் கொண்டது
மதுசூதன சாளக்கிராமம்:  சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்
சுதர்சன சாளக்கிராமம்:  ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது
ஹயக்ரீவ சாளக்கிராமம்: மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது
வாசுதேவ சாளக்கிராமம்: இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம். துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது
பிர்த்யும்ன சாளக்கிராமம்: சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது
அநிருத்த சாளக்கிராமம்: விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது
சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் .
Share this:

Write a Reply or Comment

seven + 17 =