லட்சுமி குபேரர் திருக்கோவில் :
சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரை அடுத்து உள்ள ரத்தினமங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம்.இது சுமார் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில். இது 500 வருட காலம் தொன்மை யானது. 5 அடுக்கு கோபுரத்துடன் அழகாக இக்கோயில் அமைந்துள்ளது.
இந்தியாவிலேயே, குபேரருக்கு கோவில் இருக்கும் இடம் இது தான் என்கின்றனர்.
ஆக்கலின் அதிகாரம் கொண்ட இறைவன் பிரம்மா.அவரின் புத்திரன் #விஸ்வரா ஆவார். விஸ்வராவின் மைந்தன் குபேரர்.
இலங்கையின் முதல் அரசன் குபேரன் ஆவார்.
குபேரனின் இளைய தாயாரின் மகன் ராவணன் என்கின்றனர்.
ராவணன் குபேரனிட மிருந்து இலங்கையை கைப்பற்றிய தால், குபேரன், வைர வைடூரியங் களுடன், புஷ்பக விமானத்தில் ஏறி வானத்தில் பறந்து செல்லுகையில், வானமே பிரகாசமாக ஒளிர் விட்டு தெரிந்ததாம்.
குபேரன் இலங்கையை விட்டு சென்றபின்பு, ராவணன் அனைத்து சங்கடங்களையும் அனுபவித்து, உயிர் துறக்க நேரிட்டதாம்.
குபேரன் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க சென்றார். சிவபெருமானையும், அன்னை பார்வதி தேவியையும் அருகில் கண்ட குபேரருக்கு, அன்னை பார்வதி தேவியின் அழகைக்கண்டு பிரமித்து, தன்னை மறந்து ஒரு கண்ணை சிமிட்டினார்.
அதைக்கண்ட, பார்வதி தேவி கோபம் கொண்டு, தன்னை தவறான நோக்கத்தோடு பார்ப்பதாக எண்ணி, குபேரனின், சிமிட்டிய கண்ணை வெடித்து சிதற வைத்தார்.
பார்வையை இழந்த குபேரன், சிவபெருமானிடமும், பார்வதி தேவியிடமும், தான் எந்த விதமான கெட்ட எண்ணத்தோடும் அன்னையை பார்க்கவில்லை என்றும், தன்னை மன்னித்து அருள வேண்டும் என்றும் வேண்டினார்.
சிவபெருமான், இது பற்றி, பார்வதிதான் முடிவு எடுக்கவேண்டும் என்று கூற, பார்வதி தேவியும், உண்மையை உணர்ந்து, குபேரனை மன்னித்து, இழந்த கண்ணுக்கு மாற்று கண் கொடுத்தார்.
ஆனால் அளவில் மாற்றுக்கண், சிறியதாக அமைந்துவிட்டது. குபேரன் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டாராம். குபேரனுடைய நடத்தையை மெச்சி, எட்டு திசைகளில், ஒன்றான வடக்கு திசைக்கு அதிபதியாக குபேரனை நியமனம் செய்தார் பார்வதி தேவி.
செல்வத்தையும், வளத்தையும் கொடுக்கும் அதிபதி ஆக்கினாராம். அவரை வணங்கினால், செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது #ஐதீகம்.
திருப்பதி பாலாஜி, ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமான், குபேரரிடம், தன் திருமணத்திற்கு, கடன் வாங்கியதாகவும், இன்று வரை அதற்கு, வட்டி கொடுத்துக்கொண்டு இருப்பதாகவும் வரலாறு.
ஆகவே, திருப்பதி வெங்கடேச பெருமாள், அஷாத்மாஸாவை பாதுகாத்து வருவதாக கூறுகின்றனர்.
இந்த கோவிலில், லட்சுமி கணபதி, குபேரலிங்கம், செல்வ முத்து குமரன், யோக ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு தனித்தனி கர்ப்ப கிரகங்கள் உள்ளன.
மேலும், பசுக்களை பராமரிக்கும் குடிலும் உள்ளது.
குபேரர் மிகவும் அழகாக, இடது கையில், சங்கந்தி பானையை ஏந்தி, வலது கையில், பத்மநிதி கலசத்தையும் ஏந்தி, காட்சி தருகிறார்.
உடன் அன்னை மகாலட்சுமியும், துணைவியார், #சித்தரரிணி உடன் அருள் புரிகிறார்.
இந்த திருத்தலத்தில் ஸ்ரீமகாலட்சுமி, செல்வத்துக்கு கடவுள். குபேரர் அதை பராமரித்து பரிபாலனம் செய்யும் மேலாளராக உள்ளார்.
இங்கு நடத்தப்படும் குபேர பூஜை, நிரந்தரமான வளத்தை அருளும் முக்கிய பூஜை ஆகும்.
மேலும் இழந்த செல்வத்தையும் மீட்டுத்தரும் சக்தி வாய்ந்த பூஜை ஆகும் என்று பக்தர்கள் #நம்பிக்கையோடு வருகின்றனர். பலன் பெற்றும் செல்கின்றனர்.
திருப்பதிக்கு சென்று வழிபட நினைப்பவர்கள், இங்கு வந்து தரிசனம் பெற்றால் திருப்பதி சென்று வரும் பலனைப்போல் இரு மடங்கு கிடைக்கும் என்கின்றனர்.
Share this: