மோகனூர் நாவலடியன் திருக்கோயில்
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருள்மிகு விநாயகர், காளியம்மன், மாரியம்மன், மற்றும் நாவலடியன் திருக்கோயில்கள் புதிய ராஜகோபுரம் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
இந்த கோவில் கொங்குவெள்ளாளர் சமூகத்தின் மணியன் குலம் மற்றும் கண்ணந்த குல குடிப்பாட்டு மக்களுடைய குல தெய்வமாகும்.
அண்ணன் முருகேசன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று நண்பர்களுடன் தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது.
கொங்கு மக்களின் ஆதி சிவன் கோவிலான இந்த கோவிலை வெள்ளி, பூரத்தில் தரிசனம் செய்ய முடிந்தது என்றால் பெருமாள் சம்பந்தம், புண்ணிய கணக்கு இல்லாமல் இருக்குமா என்ன?????
இந்த அதிசய கோவிலை பற்றிய ஆச்சரிய தகவல்கள் வெகு விரைவில்…
புதுயுகம் TVயின் நேரம் நல்ல நேரம் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை 7 AM நேரலையில்
வாய்ப்பளித்த கோவில் பரம்பரை அறங்காவலர் ஐயா திரு.சரவணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த
நன்றி…. நன்றி…. நன்றி….
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் பி சொக்கலிங்கம்