மே 2 – ம் தேதி காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கர்னல் அஷுதோஷ் சர்மா, மேஜர் அனூப் சூட், நாயக் ராஜேஷ் மற்றும் தினேஷ் சிங் ஆகிய 4 ராணுவ வீரர்களும், காஷ்மீர் காவல்துறையை சேர்ந்த துணை ஆய்வாளர் முகமது சகீர் ஃகாசி ஆகியோரும் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தனர்.
நாட்டு மக்களைப் பாதுகாக்க ஓய்வின்றி உழைத்து வீரமரணம் அடைந்த 5 வீரர்களின் உயிர் தியாகத்துக்கு நாம் அனைவரும் தலைவணங்கி இன்று மாலை 5.00 மணி முதல் 5.02 மணி வரை 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்.
Share this: