November 11 2018 0Comment

முருக

முருக
ஒன்றும் இல்லாதவனாக
ஒன்றும் இல்லாத முறையில்
என்றும் செந்தூர் முருகனை சந்திப்பது என் வழக்கம்.
சந்தித்து விட்டு சென்னையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தபோது காரியாபட்டியில் உள்ள சின்ன தேவர் என்னுடைய ஆருயிர் தம்பி விஜய் குமார் அவர்களின் நினைப்பு எட்டி பார்த்தது.
160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் என்றாலும் மனம் ஏனோ தம்பி விஜயகுமாரை பார்த்துவிட்டு செல்லலாம் என்று எண்ணி
தம்பியை தொடர்பு கொண்டபோது தம்பியும் அவருடைய உணவகத்தில் தான் இருப்பதாக சொன்னதைக் கேட்டு சந்தோஷத்துடன் காரியாபட்டி ஊருக்குள் வண்டி நுழைந்தது.
பாசம் கட்டியணைத்தது.
தமிழர் பழக்கம் கொடுத்து மகிழ்ந்தது உறவினருக்கு உணவை.
ஒரு வேளை உணவு ஒருவனுக்கு எத்தனை முக்கியமானது என்கின்ற ஒரு விஷயத்தை உணர்ந்த தம்பி விஜயகுமார் ஒவ்வொரு நாளும் தன்னுடைய ஊரிலே நூற்றுக்கணக்கான பேருக்கு உணவு தானம் அளித்து வருகின்றார் என்கின்ற செய்தியும் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது.
தம்பி விஜயகுமாரையும் அக்கா தமிழையும் சந்தித்தபின் சந்திப்பு மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு புகைப்படம் தம்பியின் உணவகம் முன்பு.
உடன் அடையாறு அபூதாலிப் மற்றும் #சின்ன_தேவர் காரியாபட்டி விஜயகுமார்.
அழகன் முருகனுக்கு ஆனந்த நன்றிகள்…
நம்மையே நமக்கு பிடிக்க வைக்கின்ற நிகழ்வுகள் எப்போதாவது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
எப்பொழுதும் அப்படி நடக்கவும்,
அற்புதங்களை
தினம்தினம் நிகழ்த்தி  கொண்டிருப்பதற்காகவும் கணேசனுடைய தம்பிக்கு மனமார்ந்த நன்றி
வணக்கம்
Dr.ஆண்டாள் P.சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

twelve − eight =