July 09 2022 0Comment

முத்தான பத்து

முத்தான பத்து

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை
சீரழிந்ததற்கான பத்து
அதி முக்கிய காரணங்கள்:
1 குடும்பத்தில் உள்ள
அனைவரின் கரங்களில் தவழும் ஸ்மார்ட்போன்கள்…
2 சமூக அந்தஸ்திற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்..
3 சமூக அந்தஸ்திற்காக
வாங்கப்படும் வாகனங்கள்
மற்றும் மின்னணுப் பொருட்கள்
4 வீட்டில் உணவு தயாரிப்பதையே தவிர்த்து தேவையில்லாமல் எப்போதும் வெளியே சாப்பிடுவதையே அத்தியாவசியமாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையை பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது
5 உடல் பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது
6 சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரிய நிறுவன தயாரிப்பினை (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது
7 அதிகப் பணத்தை பிறந்தநாள் மற்றும் ஆண்டு விழாவை சிறப்பாக்க செலவழிப்பது மற்றும் பிரமாண்ட திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்
8 வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவைகள்
9 தங்கள் சம்பாத்யத்தில் அனுபவிக்க இயலாததை குறித்த காலத்தில் குறைந்த காலத்தில் அடைந்து விட கடன் மற்றும் கடன் அட்டைகள் அதி முக்கியமாக மாறியது
10 வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் பணம் செலவழித்து உள் மற்றும் வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாக குப்பைகளை சேர செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது.
நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம்
இது குறைக்கப்படாவிட்டால்,
அது பல வருடங்கள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம்
மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.
இது யோசிக்க விரும்புபவர்களுக்கு மிக நுட்பமான செய்தி
நம்மில் பெரும்பாலோருக்கும்
இவை பொருந்தும்
நன்றி வித்யா
மற்றவர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ நினைப்பதில் தவறில்லை. அதேசமயம் மற்றவர்களை போலவே வாழ நினைப்பது நம் வாழ்வை பாழாக்கக் கூடும்
எனவே தேவை இல்லாததை வாங்காதே
அதை மீறி நீ வாங்கினால்,
விரைவில் உனக்கு மிகவும் தேவையானவற்றை விற்க நேரிடும்
எல்லோராலும் அப்துல்கலாம் ஆகவோ அம்பானி ஆகவோ முடியாது
நமது வாழ்க்கை, நமக்கு என்று ஒரு இலக்கு என நிர்ணயம் செய்து கொண்டால் வாழ்க்கை ஏமாற்றம் இல்லாததாக இருக்கும்
இனியாவது கவனமாக இருப்போம் இதுவரை இல்லாவிட்டால்……
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

12 + 9 =