முக்திநாத்
முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.
கோயில் தகவல்கள்:
நாடு:நேபாளம்
மாவட்டம்:மஸ்டாங் மாவட்டம்
அமைவு:தவளகிரி மண்டலம்
உற்சவர்:ஸ்ரீமூர்த்தி
கட்டடக்கலை வடிவமைப்பு:
பௌத்த கட்டிடக் கலை
வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும்.
திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.
முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை, வைணவர்கள் நாரயாணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள்.
முக்திநாத் இருப்பிடத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக சாக்தர்கள் கருதுகின்றனர்.
திபெத்திய பௌத்தர்கள் முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்று வழிபடுகிறார்கள்.
தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள், முக்திநாத்தில் உள்ள டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர்.
#முக்திநாத் #தாந்திரீக_திபெத்திய
Share this: