July 14 2022 0Comment

மாற்றம் விரும்புவர்கள் மட்டும்

மாற்றம் விரும்புவர்கள் மட்டும்

எந்தத் துறையிலும் இதற்கு
முன் யாரும் சிந்திக்காத
புதிய சிந்தனைகளை கண்டுபிடிக்கிறவர்களுக்கு தான் பெரிய மதிப்பு இருக்கும்

அதே நேரம்
அந்தச் சிந்தனைகள் உலகில்
வேறு எங்கும் காணப்படாத அளவுக்குப் புத்தம் புதியவையாக இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை

மூன்றே அடிப்படை
வண்ணங்களை வைத்துக்கொண்டு லட்சக்கணக்கான வண்ணங்கள் உருவாக்கப்படுவதுபோல்

ஓர் இடத்தில் காணும் யோசனையை அதற்குச் சிறிதும் தொடர்பில்லாத இன்னோரிடத்தில் பயன்படுத்தலாம்

அல்லது

பல் வேறு யோசனைகளை ஒட்டுப்போட்டு ஒரு புதிய யோசனையை கூட உருவாக்கலாம்

1950 களில் ஜப்பானில் Yoshiaki Shiraishi என்கிறவர் ஒரு சிறு உணவகம் வைத்திருந்தார்

மலிவான விலை
தரமான உணவு என்பதால்
மக்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து ஆதரவளித்தார்கள்

ஆனால்

அத்தனை பேருக்கும் உணவு பரிமாறுவதற்குப் போதுமான வேலையாட்கள் (சர்வர்கள்) கிடைக்கவில்லை

நம் ஊரில் இது ஒரு
பிரச்சினையே இல்லை

சட்டென்று வட இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவந்து சமாளித்திருப்பார்கள்

ஆனால் ஜப்பானில் அந்த
வசதி இல்லை என்பதால்
இந்தத் தொழிலாளர்
பற்றாக்குறையை எப்படிச் சமாளிப்பது என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினார் யோஷியாகி

அந்த நேரத்தில் அவர் எதேச்சையாக ஒரு பியர் தொழிற்சாலைக்குச் செல்லவேண்டியிருந்தது

அங்கு கன்வேயர் பெல்ட்டில் வரிசையாக நகர்ந்து செல்கிற பியர் பாட்டில்களைப் பார்த்ததும் அவருக்குச் சட்டென்று ஒரு யோசனை

இதை நம்முடைய
உணவகத்தில் பயன்படுத்திப் பார்த்தால் என்னவென்று????

அதாவது,

சர்வர்களே இல்லாத ஓர் உணவகம்

அங்கு சாப்பிட வருகிற மக்கள் முன்னே ஒரு கன்வேயர் பெல்ட் ஓடும்

அதில் விதவிதமான உணவுப் பொருட்கள் நிறைந்திருக்கும்

அவை தீர தீர புதிய உணவுப் பொருட்கள் நிரப்பப்படும்

மக்கள் வேண்டியதை எடுத்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம்

இதுதான் யோஷியாகிக்குத் தோன்றிய யோசனை

1958ல் உலகின் முதல்
கன்வேயர் பெல்ட் உணவகத்தை அறிமுகப்படுத்தினார் யோஷியாகி

சுற்றியிருந்தவர்கள் அவரை ‘ஒருமாதிரி’ பார்த்தாலும் இந்த யோசனை மக்களுக்குப் பிடித்திருந்தது

பியர் தொழிற்சாலையில்
கிடைத்த யோசனையை உணவகத்தில் பயன்படுத்தி வெற்றிபெற்றுவிட்டார் அவர்

இன்று, ‘கன்வேயர் பெல்ட் உணவகங்கள்’ உலகம்முழுக்க இருக்கின்றன

அதற்குக் காரணமான மூலவர்
யோஷியாகியும் தன்னுடைய புதுமையான யோசனையால்
உலக உணவக வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பெற்றுவிட்டார்……

அவர் செய்தது என்ன????

மாற்றி யோசி

விடைகளும் கிடைக்கும்
விடைக்குள் இருந்து
கேள்விகளும் பிறக்கும்

ஒரு விடையை கண்டுபிடித்த பிறகு அந்த விடையில் இருந்து எனக்கு இப்படி பிறந்த ஒரு கேள்வி ஒன்று சொல்லட்டுமா….

குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்பது தான் உண்மை என்றால் ஏன் எல்லா குரங்குகளும் மனிதனாக மாறவில்லை

ஏன் எண்ணிலடங்கா குரங்குகள் குரங்குகளாகவே இருந்து விட்டுப் போய் விடுகின்றது!!!!!!

யோசியுங்கள்…

உங்களை நீங்களே
கேள்வி கேளுங்கள்…

உங்களுடன் நீங்களே
தர்க்கம் செய்து கொள்ளுங்கள்…

உங்களை நீங்களே
வெல்லக்கூடிய வாய்ப்புகள்
நிச்சயம் உருவாகும்…..

மாற்றி யோசியுங்கள் மாற்றம் விரும்புபவர்கள் மட்டும்…..

என்றும் அன்புடன்

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

2 × 4 =