மார்கழியும், ஆண்டாளும்….

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

வியாபார நோக்கத்திற்காக ஆண்டாள் திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் பேசி, மக்களுக்கு புரிய வைக்கின்றேன் என்பதற்காக சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லி ஆண்டாளையே வியாபாரமாக்கி தங்களை வளப்படுத்தி கொண்டவர்கள் நிறைய உண்டு நம் நாட்டில்.

நான் கூறுகின்றேன் என் மக்களே!

நாச்சியார் திருமொழியும், திருப்பாவையும் நமக்கு புரியாமலேயே போகட்டும் காரணம் அதை புரிந்து கொள்வதற்காக நாம் பிறப்பு எடுக்கவில்லை இந்த பூவுலகில்.

நம் பிறப்பின் நோக்கமே ஆண்டாளை சரணடைந்து ஆண்டாளாகவே மாறுவது தான். அவளாக நீங்கள் மாறினால் தான் நீங்கள் எண்ணும் அத்தனையும் உங்கள் வசப்படும்.

ஆண்டாளாக நீங்கள் மாற வேண்டுமானால் ஆண்டாளை அவள் அவதரித்த பூமியில், அவள் பிறந்த கிழமையில், அவளுக்கு பிடித்த மாதத்தின் முதல் நாள் அன்று அவளை பார்ப்பது தானே பொருத்தமான நாளாக இருக்கும். வாருங்கள் வரும் செவ்வாய் கிழமை மதியம் 1:30 மணி –  மார்கழி 1 – ம் தேதியன்று (16-12-2014) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க. மேலும் அன்று முதல் ஆண்டாள் காலண்டர் விநியோகம் செய்ய இருப்பதால் நண்பர்கள் அனைவரும் ஆண்டாளை தரிசித்து பின் ஆண்டாள் காலண்டர் பெற்று கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

2015 புது வருடத்தை மார்கழி 1 அன்று ஆண்டாள் முகத்தை பார்த்து துவங்குவோம். ஆண்டாளை தரிசித்து வருடம் முழுவதும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

eighteen − two =