December 12 2021 0Comment

மாணிக்கம்பாளையம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழா

மாணிக்கம்பாளையம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை 

ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழா

சேவாஇன்டர்நேஷனல் வழங்கிய ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் சென்னை CCGS உடன் இணைந்து  நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு வட்டம் மாணிக்கம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொடுக்கப்பட்டது, இந்த நிகழ்வில் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். சேகர் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை மருத்துவர்களிடம் ஒப்படைத்தார்

மேலும் அவருடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் பெரியமணலி திரு.சரவணன், பேரவையின் மாவட்ட பொருப்பாளர்கள்  திரு. இளமுருகன், திரு மோகனூர் முருகேசன்,திரு. சன் மில்க் சேகர், திருமதி, தனலட்சுமி,பெரியமணலி திரு.கனகராஜ், திருசெங்கோடு திரு.கண்ணன் வேலகவுண்டன்பட்டி திரு.சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன்  மாணிக்கம்பாளையம் ஸ்ரீ நல்லகுமாரசுவாமி_கோவில் தர்மகர்த்தா திரு. நல்லுசாமி, கூத்தம்பூண்டி கிராம பஞ்சாயத்து தலைவர்,துணை தலைவர், எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

நிகழ்வின் நிறைவில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் திரு. கருணாகரன் மற்றும் மருத்துவ குழுவினர் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Share this:

Write a Reply or Comment

five × 5 =