May 29 2018 0Comment

மலரும் நினைவுகள் 2:

மலரும் நினைவுகள் 2:

மறக்கவே கூடாத இருவர்:
வாழ்க்கையின் மிகவும் சவாலான, மோசமான காலகட்டத்தில் இருந்த போது, என்னை முழுவதும் நம்பி எனக்கு சிறந்த வேலை வாய்ப்பை கொடுத்து என்னை அடுத்த கட்டம் நகர்த்தி கொள்ள உதவிய Mr.Mehul Patel (Chairman – Anupam Group,Gujarat)
மற்றும்
எனக்கு என்னை #Chockisim புரிய வைத்து, எனக்கு தெரிய வேண்டியதை எனக்கு புரியும் வகையில் சொல்லி கொடுத்து என்னையே எனக்கு அறிமுகம் செய்து இன்றைய என்னுடைய இமாலய வெற்றிக்கு மிக பெரிய காரணமான Mr.P.B.Ravikumar (General Manager, Anupam Group, Gujarat) இருவருடன் 1997 – ம் வருடம் (தீபாவளியை ஒட்டி நடந்த நிகழ்வு) எனக்கு மிக பெரிய நல்ல பெயரை கொடுத்த நிகழ்வின் நினைவாக எடுத்து கொண்ட புகைப்படம்.
இன்று நான் எனக்கு சொந்தமான வீட்டில் வசிப்பது பெரிய விஷயமில்லை. 2002 – 2003 – ன் போதே முதல் முதலில் நான் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று எனக்கு அவரிடம் உபரியாக இருந்த வீட்டை விற்றவர்.
தேனை சாப்பிடாமலேயே அது சுவையாக இருக்கும் என்று தேனை விற்பவன் சொல்வது போல, இன்று நிறைய பேர் சொந்த வீடே இல்லாமல் வாஸ்து உண்மை எனவே வாஸ்து பாருங்கள் என வாஸ்துவை தொழிலாக பார்க்கலாம். அது அவர்களின் உரிமை.
நான் அது போன்ற ஆட்களிடம் இருந்து மாறுபட்டவன். எனக்கு வாஸ்து ஓரளவிற்கு வசப்பட்டதற்கு மிக பெரிய காரணம் இவர் கொடுத்த வீடு தான்.
அந்த வகையில் என்னையும், என் வீட்டையும் பரிசோதனை கூடமாக மாற்றிக்கொண்டு வாழ்வியல் மற்றும் வாஸ்து சம்பந்தமாக நிறைய உண்மைகளை நான் உணர்வதற்கு காரணமானவர் இவர்.
ஆனையை முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி என்கின்ற பழமொழி இவருக்கே பொருந்தும்.
(பொருள்:
அம்மை என்றால் அனுபவத்தில் பழுத்தவர். சுண்டாங்கி என்றால் கறியோடு சேர்க்க அரைத்த சம்பாரம், இன்றைய வழக்கில் மசாலா. அனுபவத்தில் பழுத்து ஆனையையே (அல்லது மலையை) விழுங்கிக் காட்டிய அம்மையாருக்கு ஒரு பூனையை விழுங்குவது கறியோடு சேர்த்த மசாலாவை உண்பது போலத்தானே?
அதை தான், “ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்? )
இவரை பொறுத்த வரை எந்த செயலாக இருந்தாலும் அவர் அதை சிறிய செயலாக மாற்றி மிக எளிதாக செய்து முடித்து விடுவார்….
இந்த நாளில் இவர்களை நினைவு கொள்வதில் நான் பெருமை அடைகின்றேன்…..
இதுவும், எதுவும் கடந்து போகும்…….
மலரும் நினைவுகள் தொடரும்……………….
All Is well
ஆண்டாள் பி சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

ten + ten =