தெலுங்கானா பகுதியில் உள்ள மேட்பள்லி(ஆந்திர நக்சல்களின் தலைமையகம்) என்கின்ற இடத்தில உள்ள ஆந்திர அரசாங்கத்திற்கு சொந்தமான நிசாம் சக்கரை ஆலை விரிவாக்க பணி சம்மந்தமாக அங்கு இருந்து வேலை செய்த போதுஇந்த பிள்ளைகளுடன் கிரிக்கெட் ஆடுவது ஒன்று தான் என் ஒரே பொழுதுபோக்கு …
அவர்களின் கபில்தேவ் நான் தான்.
அருமையான தெலுங்கில் மனமார்ந்த பாராட்டுக்கள் அவர்களுக்கு பாராட்ட வேண்டும் என மனதில் தோன்றிய உடனே – எதிர்பார்ப்பு ஏதுவும் இல்லாமல்.
பார்க்கின்றவர்களை திரும்பவும் பார்க்கவே முடியாது என்கின்ற விஷயம் தெரியாமலே பார்த்து முடித்து விட்டு வந்து விட்டேன் திரும்பவும் பார்க்க ஆசை அதிகம் தான்
ஆனால் அப்போது என்னை பிடித்த பிள்ளைகளுக்கு இப்போது பிடிக்குமா என்னை என்ற கேள்வியும்
என்னை ஒருவேளை பிடிக்காமல் போய் விட்டால் என்கின்ற பயமே உண்மையாகிவிடும் என்பது தான் உண்மை என்பதால்
உள்ள ஆசையை ஊமையாக்கி கொண்டு
பெரு மூச்சுடன் நாட்கள் நகர்கின்றன…
நகர்தல் நாட்காட்டிக்கும்
கடிகாரத்திற்கும்
மட்டும் அழகல்ல …..
நமக்கும் தான் என்பதே நிஜம்
ஆதலால் இனிமேலாவது
பார்க்கின்றவர்களை திரும்பவும் பார்க்க முயற்சிக்க
எத்தனித்து
இனி
வைக்கின்ற
கால்
பதிக்கின்ற
தடம்
தவறாமல்
பிழலாமல்
இருக்க
தவழும் முயற்சியில் நான்…….
வாழ்க்கை வாழ்வதற்கல்ல …
கொண்டாடுவதற்கு.
என்றும் அன்புடன்
ஆண்டாள் P சொக்கலிங்கம்