May 07 2018 0Comment

மறக்க மறந்த கதை:

 

நீங்கள்

என்ன நிலையில் இருந்து 

இதை படித்தாலும்

ஒரு மெல்லிய சிறிய

அற்புத

இதழோர 

புன்னகை நிச்சயம்.

என் காதலியை நான் 

கடைசியாக பார்த்தபோது 

அவள் அணிந்திருந்த  

உடையின் நிறமானது 

எனக்கு பிடித்த 

எனக்கு பிடிக்கும் 

என அவளுக்கு மட்டும் தெரிந்த

எனக்கு பிடித்ததால் 

அவளுக்கும் 

ரொம்ப ரொம்ப பிடித்து போன 

ராமர் நிற நீல வண்ணத்தில் தான்

நீலத்துடைய ஞாபகத்தோடு 

நீளமான நாட்கள் 

மிக நீளமாக 

நீள்கின்றன 

நேற்று 

முற்றுபுள்ளி 

கேள்வி குறியாக 

மாறியது

ஒர் ஆச்சரியம் தான்

என்றாலும்

இன்று 

அந்த 

ஆச்சரிய குறியே

ஆச்சரியப்பட்டு

நிற்பது தான் எனக்கு 

பெரிய ஆச்சர்யம் –

எல்லாவற்றையும் விட

அனைத்தும் சமர்ப்பணம் 

ஆச்சரிய கடவுள்

அன்னை ஆண்டாளுக்கே

என்றும் அன்புடன்

திருப்பதி மலையப்ப சாமி

 

 

 

Share this:

Write a Reply or Comment

17 − 16 =