மறக்க கூடாத மனிதர்கள் – 7
P.B.வேணுகோபால்
அண்ணாமலை பல்கலைக்கழகம்
நேற்றும்
இன்றும்
என்றும்
எனக்கொரு
அதிசயம்
இவன்
இவனுக்கொரு
அதிசயம்
நான்
மாணவனாக
சிதம்பரம்
சென்றவனை
மனிதனாக்கிய
ஆறில்
ஒன்று
இவன்
இவன்
என்
நண்பனாகியது
என் பெரும்
பேறு
வேணு
வகுப்பில்
எப்போதும்
அமரும்
இடம்
முதல்
மேசையில்;
அதனால்தான்
என்னவோ
வகுப்பிலும்
எப்போதும்
முதல் தான்…..
எனக்கு
இருக்கை
கடைசியில்
என்பதால்
என்னவோ
வகுப்பிலும்
எப்போதும்
கடைசி தான்…..
ஏணி
வைத்தாலும்
எட்டி
பிடிக்க
முடியாத
இடத்தில்
தான்
எப்போதும்
அவன்
இருந்தாலும்
ஜெய்சங்கர்
என்கின்ற
சக
நண்பனுக்காக
1989
வரலாறு
காணாத
போராட்டம்
நடந்த போது
கல்லூரிக்கு
3 மாதம்
விடுப்பு
அறிவிக்கபட்ட போது
முதல்
முறையாக
என்னிடம்
வேண்டா
வெறுப்பாக
கேள்வி கேட்ட
வேணுவிடம்
நான்
சொன்னதாக
அவன்
இன்றும்
சொல்வது
வேணு
நீ
நல்லா
படி
படித்து
பெரிய
இடத்துக்கு
நீ வருவே
என்னா
நீ
போற
பிளேன்ல
பக்கத்து
சீட்ல
நான்
உட்கார்ந்து
இருப்பேன்
நேற்று சந்தித்த
போது
கூட
இதை
சிலாகித்து
சொல்லி
மாய்ந்து
போனான்
லேசான
பரிச்சயம்
நான்
மேற் சொன்ன
வாசகத்தினால்
என்றாலும்
1991க்கு
பிறகு
எங்களுக்குள்
ஒரு
பெரிய
நட்பு
மலர்ந்தது
அது
தொய்வற்ற
துல்லியமான
பால் மாறா
உறவு
இன்று
டோயோட்டோ
இந்தியாவின்
தலைமை
பொறுப்பில்
இருந்தாலும்
அதே
கண்ணியமான
சூத்திரங்களுக்கு
அப்பாற்பட்ட
நட்பாக
திகழ்கின்றது
Mr.Perfect = வேணு
அவனுடைய
நொடி
துல்லியமான
செய்கைகள்
அவனை
இந்த
அளவிற்கு
உயர்த்தியுள்ளது
நான்
நொடி
துல்லியமான
செய்கைகள்
இன்று
செய்வதற்கு
இவனே
முன்னுதாரணம்
பேசுவதற்கு
நிறைய
இருக்கின்றது
பேச
சந்தர்ப்பம்
உருவாக்கி
பேசுவேன்
இவன்
என்
வாழ்க்கையில்
நடத்திய
அதிசயங்களை…
அதிசயங்கள்
நான்
நிறைய
இவனால்
இன்று வரை
பெற்றாலும்
ஏனோ
இவனுக்கும்
நான்
ஒரு
அதிசயம்
என்று
இன்றும்
அவன்
என்னை பார்த்து
சொல்வது
என்பது
தான்
எனக்கு
பெரிய
அதிசயம்
உங்கள்
சிக்மண்ட் சொக்கு @
ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: