January 31 2020 0Comment

மருத்துவர் ராமதாஸ் அய்யா

நேற்று 30/01/2020 மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் வைத்து சந்தித்துப் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

எத்தனையோ அரசியல் ஆளுமைகளுடன் பேசி பழகி இருந்தாலும் மருத்துவர் ராமதாஸ் அய்யா முற்றிலும் மாறுபட்டவர் அனைவரிடமிருந்தும்.

அவரை சந்தித்ததன் நோக்கம் உறங்கா அரங்கனின் உயிர்த்துடிப்பான ஆண்டாள் குறித்து அவதூறாக திரு.வைரமுத்து அவர்கள் பேசியதை கண்டித்து தமிழ்நாடு அரசியல் தலைவர்களில் இரண்டே இரண்டு பேர்தான் குரல் கொடுத்தார்கள். (பிஜேபி நீங்கலாக)
அதில் முதன்மையானவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள்.

பிற மதத்தினர் தப்பாக எடுத்துக் கொள்வார்கள்,
சினிமா துறையினர் தன்னை தவறாக சித்தரித்து விடுவார்கள்,
இந்து மதத்தை ஆதரித்தால் சிறுபான்மையினர் கோபம் கொள்வார்கள்
என்றெல்லாம் யோசித்து கொண்டிருக்காமல் உண்மையான அக்கறையுடன் உளமார தைரியமாக குரல் கொடுத்த ஒரே ஆளுமை மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள்.

வியந்து போனேன் இவரின் ஹாஸ்ய குணாதிசயத்தை கண்டு.

அசந்து போனேன் சாமானியர்களிடம் இவர் உரையாடுவதை கண்டு.

உறைந்து நின்றேன் இவரின் எளிமையை கண்டு.

இவரை சந்தித்த பின்
டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அய்யா அவர்களுடன் ஒரு நீண்ட உரையாடல்.

உரையாடல் துவக்கத்தில் முதலில் அவருக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவித்து கொண்டேன் தாமிரபரணிக்கு அவர் முன்னெடுத்த முயற்சிக்காக. மதுவினால் ஏற்படும் தீமைகளை மிகச் சரியாக உணர்ந்தவராக டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அய்யா அவர்களை நான் பார்த்திருக்கின்றேன் பேசும்போது அதை உணர்ந்தேன். அதனால் அவரிடம் இது சம்பந்தமாக மக்களுக்காக பெண்களுக்காக ஒரு நல்ல விஷயத்தை முன் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தேன். நிச்சயமாக அதை முன்னெடுப்பதாக உறுதியும் கொடுத்தார். உரையாடல் முடிவில் அவருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்து விட்டு மிகப்பெரிய சந்தோஷத்துடன் சென்னை திரும்பினேன்.

ஒரு சாதாரண டாக்டராக தொழிலை துவங்கி இன்றைக்கு லட்சக்கணக்கான மக்கள் படிப்பதற்கும், அரசு வேலையில் இருப்பதற்கும், ஆயிரக்கணக்கான மக்கள் உயர்ந்த நிலையை அடைவதற்கும் காரணமான ஒரு சிறந்த ஆளுமை மருத்துவர் ராமதாஸ் ஐயா என்றால் அது மிகையாகாது.

மக்களே நன்றியோடு இவரை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

பணம் வாங்கி கொண்டு தவறானவர்களுக்கு உங்கள் வாக்கை அளிக்காதீர்கள்.

நீங்கள் அப்படி தெளிவாக மாறக்கூடிய பட்சத்தில் படித்த அறிவார்ந்த விஷய ஞானம் பொருந்திய டாக்டர்.அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் நாட்டை வழி நடத்தக்கூடிய வாய்ப்பு நிச்சயம் உருவாகும்.

மது இல்லாத
இந்து மத கடவுள்களை வெறுக்காத
இந்து மத கடவுள்கள் மேல் மிகுந்த பக்தி கொண்ட
பிற மதத்தினரையும் சரிசமமாக நடத்த கூடிய
ஒரு தமிழகம் விரைவில் உருவாகும் என நம்புகின்றேன்.

நம்பிக்கைதானே வாழ்க்கை
Dr. ஆண்டாள் P.சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four × four =