மங்கலம் தரும் அங்காளம்மன் குங்குமம்
அங்களபரமேஸ்வரி ஆலயத்தின் கருவறையில் இருந்து எடுத்துத் தரப்படும் குங்குமம் பிரசாதத்துக்கு அளவற்ற சக்தி உண்டு.
ஆத்மார்த்தமாக யார் ஒருவர் அந்த குங்குமத்தை தம் நெற்றியில் பூசிக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அங்காளம்மனின் மகத்துவம் புரியும்.
பொதுவாகவே #குங்குமம் என்பது கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் மங்கலத்தை தரக்கூடியது.
பெண்களின் தலை வகிட்டு நுனியில் #லட்சுமி இருப்பதாக ஐதீகம். அதில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு மங்கலத்தை உண்டாக்கும்.
மேல்மலையனூரில் குங்கும பிரசாதம் பெறும்போது மிகவும் பணிவாக, பவ்வியமாகப் பெற வேண்டும்.
பிறகு அதை வலது கை மோதிர விரலால் எடுத்து #நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.
இது எல்லா வித நன்மைகளையும் தரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கட்டை விரலால் குங்குமம் அணிந்தால் தைரியம் பிறக்கும். ஆள்காட்டி விரலால் குங்குமம் பூசினால் நிர்வாகத்திறமை மேம்படும். நடுவிரலால் குங்குமம் வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.
Share this: