மகிமாலீஸ்வரர் திருக்கோயில்:
ஈரோடு நகரம் பழங்காலம் தொட்டே சைவ மதத்தை போற்றி வந்துள்ளது. இரண்டு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதால் ஈரோடை என்ற பெயர் ஏற்பட்டது.
பின்னர் மருவி ஈரோடு என அழைக்கப்பட்டது என ஒரு பெயர் காரணம் சொல்லப்பட்டாலும், ஈரோடு நகர மக்கள் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.
எந்நாட்டவருக்கும் அதிபதியான தென்னாடு கொண்ட சிவன் தன் தலையில் மனைவியான கங்கையுடன் வீற்றிருப்பதால் அவரது தலை ஈரமாக இருப்பதை உணர்த்தும் பொருட்டு ஈரஓடு என பெயர் பெற்றது என சொல்லப்படுவதும் உண்டு.
படைப்பு கடவுளான பிரம்மா இங்கு தன்னை மறந்து சிவனை பூஜித்ததால் மறந்தை எனவும், மயிலை எனவும், ஆர்த்த கபாலபுரி எனவும் பல பெயர்களை ஈரோடு நகர் தாங்கியிருந்தது இலக்கியங்கள் வழியாக தெரிய வருகிறது.
கொங்கு நாட்டு சிவன் கோயில்களில் மிகவும் பழமையான சிறப்பை பெற்றது ஈரோட்டில் உள்ள #மகிமாலீஸ்வர் கோயில்.
மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அடியவருக்கு அடியவராக போற்றப்படும் சிவ பெருமான் மகிமாலீஸ்வரராக, #மங்களாம்பிகை அம்மனுடன் மகாலிங்கமாக அருள்பாலித்து வருகிறார்.
#சிறப்பம்சங்கள் :
இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல்சாயாமல் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. 63 நாயன்மார்கள் சிலைகளும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு சிறப்பாகும்.
ஈரோடு நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
Share this: