January 23 2021 0Comment

போடியில் ஒரு புன்னகை பூ..

போடியில் ஒரு புன்னகை பூ..

சில புகைப்படங்கள் யாருக்கும் தெரியவே தெரியாத அபூர்வமான உள் கதைகளை கடைசிவரை யாருக்கும் தெரியாமலேயே உள்ளடக்கி வைத்திருக்கும்.. இந்த புகைப்படமும் சற்றும் அதற்கு விதிவிலக்கான ஒன்றல்ல…..

ஜெய்ஸ்ரீ கண்ணன் தம்பதியின் நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு இந்த குழந்தை – சாயின் அருளால்… பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு எனக்கு ஒன்றரை வருட காலம் ஆகியிருந்தாலும் இன்றுதான் அதற்கான நாள் வந்தது அக்குழந்தையை பார்ப்பதற்கு என்ற சந்தோஷத்துடன் அக்குழந்தையை பார்க்கப் போனேன். நேரம்தானே அத்தனையையும் தீர்மானிக்கின்றது என்பதால் அந்த குழந்தையும் அலட்டிக்கொள்ளாமல் என்னை தன்னுடன் சேர்த்துக் கொண்டது சென்ற சில நிமிடங்களில்.

கடும் வேலைகளின் நடுவே போடி வரை பிரயாணித்து போடியின் புன்னகைப்பூவை சந்தித்தபின் ஒரு உண்மையை உணர்ந்து கொண்டேன். என்னை விட அறிவாளி இந்த குழந்தை என்று குழந்தையைத் தொட்டுத் தூக்கிய பின் புகைப்படங்கள் எடுத்த பின் கிளம்ப எத்தனித்தபோது, நான் அணிந்திருந்த கண்ணாடியை மறந்து கிளம்ப எத்தனித்தபோது தன் கையை அசைத்து தன் பிஞ்சு கையை இரு முறை ஆட்டி எனக்கு ஜாடை காட்டியது உன் கண்ணாடி உன் பின் இருக்கின்றது என்று…

குழந்தையும் தெய்வமும் ஒன்று என படித்திருக்கின்றேன் இன்று புரிந்து கொண்டு அறிந்து கொண்டேன் என்னை விட பிறந்த குழந்தைக்கு ஞாபகசக்தி அதிகம் என்று… வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய உயரத்தை எனக்கு உணர்த்தி கொண்டிருக்கும் ஆண்டாள் தாயாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்…

என்றும் அன்புடன் Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

17 − fourteen =