October 28 2018 0Comment

பொன்மணி வைரமுத்து கவிதை

கவிஞர் வைரமுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர்.  .
இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.  வைரமுத்து நாத்திகவாதி, பொன்மணி ஆத்திகவாதி.  அண்மையில் ஆண்டாள் பற்றி பேசியது தவறு என்று பலர் கூறியபோது, பெண்மணியும் அவ்வாறே அதை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.   அந்த கவிதை இதோ:
மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த
ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே!
நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு
கோரும்வரை நீளும் வழக்கு.
இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான்
இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான்
சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல்
சொந்தமாகக் கதைசொல்லல் ஆணவம்தான்
எந்தநாளும் அனுபவங்கள் மொழியிலில்லை
எம்மொழிக்கும் அனுபவங்கள் இருப்பதில்லை
அந்தரங்க நம்பிக்கை அனுபவம்தான்
அதற்குமேலோர் அத்தாட்சி யாதுமில்லை!
மனிதரென நமையுலகம் மதிப்பதெல்லாம்
மாண்புதரும் கவிதையெனும் சக்தியன்றோ?
தனியான மரியாதை தமிழாலன்றோ?
தமிழுக்கு மற்றோர்பேர் தரமேயன்றோ?
இனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ?
இழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ?
மனமறியச் செய்தபிழை மறுக்காதீர்கள்!
மல்லுக்குத் திரைபோட்டு மறைக்காதீர்கள்!
ஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை
அயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை
ஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை
அனலில்கை வைக்காதீர்! அதுபேதம் பார்ப்பதில்லை!
ஆராய்ச்சிக் கருத்துத்தான் உம்கருத்தா?
அதையேனும் சொல்கின்ற நேர்மையுண்டா?
அநியாயம் செய்துவிட்டு மழுப்பாதீர்கள்
அறமில்லை! அதுதமிழன் மரபுமில்லை!
இறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை
இறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை
எம்முயிரை, எம்தாயை, எமதாண்டாளை
ஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்?
குறையேதான்! வக்கிரம்தான்! கோளாறேதான்!
குற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்!
கும்பிடுவோர் பாதையிலே குறுக்கிடாதீர்
கொண்டபுகழ் கோதையினால் இழந்திடாதீர்!
நன்றி ! Srinivasa Sarma
……………………………………….
கழுத்திலும் காதிலும் பொன்னும் இல்லை
மணியும் இல்லை
வைரமும் இல்லை
முத்தும் இல்லை
பணிப்பெண்  போல ரப்பர் வளை மட்டுமே
நாம் பார்த்த பொன்மணியா இவர்
எப்படிப்பட்ட வாழ்க்கை உன்னுடன் வாழ்ந்தார் என்று கட்டியமல்லவா  கூறுகிறது இந்த படம்
கோவலனுடன் அல்லவா வாழ்ந்து இருக்கிறார்
இன்றைக்கு கொலைக்களத்தில் நீ நிற்கும் போது
இந்த பெண் ஒடி வந்து நீதி கேட்க போவதில்லை
மெளன சாட்சியாக உன்னை கடந்து மட்டுமே செல்வார்
ஆயிரம் சாட்சிகள் சொல்லும் இந்த படம்
50 வருடங்களுக்கு  முன்பே உன் ஆசான் உனக்காகவே எழுதிய பாடல் நினைவிருக்கிறதா  வைரமுத்து
“தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா
காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல் தப்பித்து வந்தானம்மா
கிளை விட்டு கிளை தாவி குடி வைத்து கொண்டவன்  முடிவெட்டு வந்தானம்மா
இன்று மனம் கெட்டு குணம் கெட்டு  மதி கெட்டு நிதி கெட்டு நிலை கெட்டு வந்தானம்மா
பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்தவன்
கை நெல்லும் விட்டானம்மா
இன்று பள்ளத்தில்  வீழ்ந்து  எழுந்தவன் பல்லக்கை தேடி நடந்தானம்மா “
வைரமுத்து  நீ சொல்லிய வார்த்த்தைகளும் வாழ்ந்த வாழ்க்கையும் உனை எங்கு கொண்டு வந்து
நிறுத்தியிருக்கிறது  பார்த்தாயா
ஊழ்வினை வந்து உறுத்துகிறதா  வைரமுத்து
Share this:

Write a Reply or Comment

3 × one =