பெரியமருது

சனிப்பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி என்று ஜோதிடர்கள் தங்கள் வயிற்று பிழைப்பிற்காக மக்களை பயமுறுத்தி திருநள்ளாறு, காளகஸ்தி, திருநாகேஸ்வரம் மற்றும் திருப்பாம்பரம் போன்ற கோவில்களுக்கு ஆட்களை அனுப்புவதையே பெரிய வேலையாக வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த காணொளி மிக முக்கியமானதாக இருக்கும் என நம்புகின்றேன். காரணம், நம்முடைய தமிழ் சமுதாயமானது நம் மதத்தை எவ்வாறு பார்த்திருக்கின்றது, எவ்வாறு பார்க்க வேண்டும் என்கின்ற விஷயத்தை பெரியமருது – ன் வாழ்க்கையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல… கொண்டாடுவதற்கு… காளையார் கோவில் கோபுரம் வீழக்கூடாது என்பதற்காக தன் உயிரை இழந்த இந்த மாவீரன் எங்கே!!! அடுத்தவர்கள் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அழுக்கு குளத்தில் குளித்துவிட்டு சனீஸ்வரன் – ஐ பார்த்து விட்டால் நம்முடைய பிரச்சினைகள் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கும் பெரும்பான்மையான மக்கள் எங்கே???? சிந்திக்க வேண்டிய தருணம் இது… செயல் பட வேண்டிய தருணம் இது… சிந்தித்து செயல் படுங்கள்…. நன்றி வணக்கம்.

Share this:

Write a Reply or Comment

2 × 5 =