புண்ணியகோடியப்பர் திருக்கோவில்:
புண்ணியகோடியப்பர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தலங்களில் இதுவும் ஒரு சிவத்தலமாகும்.
#திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது.
மூலவர் : புண்ணியகோடியப்பர்.
உற்சவர் : திருவிடைவாயப்பர்.
அம்மன் : அபிராமி.
தல விருட்சம் : கஸ்தூரி அரளி.
தீர்த்தம் : ஸ்ரீதீர்த்தம்.
ஆகமம் : சிவாகமம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.
புராண பெயர் : திருவிடைவாய்.
ஊர் : திருவிடைவாசல்.
மாவட்டம் : திருவாரூர்.
தல வரலாறு :
விடையன் என்னும் சூரிய குலத்து அரசன் கோவில் கட்டி வழிபட்ட தலமாதலால் இத்தலத்திற்கு #திருவிடைவாசல் என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் சிவனின் வாகனமாகவும் கொடியாகவும் ‘#விடை” உள்ளது. சிவத்தலமான இங்கு விடையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இத்தலம் திருவிடைவாசல் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் சம்பந்தர் தனது பாடலில் ‘விடைவாயே” என குறிப்பிட்டு பாடியிருக்கிறார்.
தலச் சிறப்பு :
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.
கோவில் பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், சூரியன், சந்திரன் இருவரும் வாகனத்துடன் உள்ளனர்.
அதிசயத்தின் அடிப்படையில் இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.
இத்தல சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார்.
இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.
கோவிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான #வெண்ணாறு தெற்கே #வெள்ளையாறு வடக்கே #பாண்டையாறு கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது.
Share this: