பிரம்மன் திருக்கோயில்:
ஒரு சமயம் பிரம்மாவிற்கு, படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது என்றும், சிவபெருமான் மற்றும் விஷ்ணுவிடம் படைக்கும் சக்தி இல்லை என்பது குறித்தும் கர்வம் ஏற்பட்டது.
இதையறிந்த விஷ்ணு, பிரம்மனின் கர்வத்தை நீக்க ஒரு பு+தத்தை பிரம்மனிடம் அனுப்பினார். அப்பு+தத்தை பார்த்து பயந்துபோன பிரம்மா, விஷ்ணுவிடம் சென்று, தான் படைக்காத பு+தம் ஒன்று தன்னை பயமுறுத்துவதாகவும், அதனிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும் வேண்டினார்.
அதற்கு விஷ்ணு, உன்னுடைய கர்வத்தை அடக்குவதற்காகவே நான் இந்த பு+தத்தை அனுப்பினேன். உனக்கு ஏற்பட்ட அகங்காரத்தினால் படைக்கும் தொழில் உன்னை விட்டு மறந்து போகும், என்று சாபமிட்டார்.
அதனால் வருந்திய பிரம்மா, விஷ்ணுவிடம் சாப விமோசனம் வேண்டினார். அதற்கு விஷ்ணு, பு+மியில் சென்று தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும், என்று வழி கூறினார்.
எனவே, பிரம்மனும் பிரளய காலத்திலும் அழியாத தலமான கும்பகோணத்துக்கு வந்து தவம் செய்தார். அவரின் யாகத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் சேவை செய்தனர்.
அந்த யாகத்தின் பலனாக, யாக குண்டத்தில் இருந்து, மகாலட்சுமி சமேதராக விஷ்ணு தோன்றி, பிரம்மனுக்கு சாபவிமோசனத்தினை கொடுத்து வேதங்களை மீண்டும் பிரம்மனுக்கு சொல்லித்தந்து வேத நாராயணன் என்று பெயர் பெற்றார்.
தாயார் வேதவல்லி எனப்பட்டாள். யாகம் முடிந்தவுடன் விஷ்ணு தன் கதாயுதத்தால் பு+மியை பிளந்து ஒரு நதியை உருவாக்கி இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அவபிருத ஸ்நானம் செய்வதற்கு வழிவகுத்தார்.
இந்த நதி ஹரி சொல்லாறு என்று வழங்கப்பட்டது. இப்பெயர் காலப்போக்கில் மருவி அரசலாறு என அழைக்கப்படுகிறது.
#சிறப்பம்சங்கள்:
அதிசயத்தின் அடிப்படையில் பிரம்மனுக்கு எதிரே, யோக நரசிம்மர் இரண்டு தாயார்களுடன் உள்ளார். மேலும் பிரம்மா, தன் தேவியர்களான சரஸ்வதி மற்றும் காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப்பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில் உள்ளார்.
இதற்கு அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வேதநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பு+தேவியருடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவ்வாறாக ஒரே இடத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் இம்மூவரையும் தரிசிப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
கும்பகோணத்தின் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை பிரம்மன் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.
Share this: